தற்போது சிக்கினார் கமல் குணவர்த்தன ! மொத்தமாக 4 இலங்கை தளபதிகளுக்கு பிரிட்டன் தடை

ஜஸ்மின் சூக்கா தொடுத்துள்ள முறைப்பாட்டின் PDF பிரதியை பார்க்க இங்கே அழுத்தவும் https://itjpsl.com/dossiers/kamal-gunaratne

லண்டன்: நான்கு இலங்கை போர்க்குற்றவாளிகள் பிரிட்டனால் சமீபத்தில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் ஒரு முக்கிய இலங்கை இராணுவ அதிகாரி மீது தடை விதிக்கக் கோரி சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (International Truth and Justice Project – ITJP) பிரிட்டிஷ் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்திடம் (Foreign, Commonwealth & Development Office – FCDO) ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (Major General Kamal Gunaratne) தொடர்பான விரிவான ஆவணங்களே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கை தளபது மேஜர் ஜெனரல் கமல் குணவர்த்தனவுக்கும், பிரிட்டன் அரசு தடை போட உள்ளது. இதனூடாக இவர்கள் போர் குற்றவாளி என்ற தெளிவான ஒரு விளக்கத்தை உலகத்திற்கு சொல்லியுள்ளது பிரித்தானியா.

ITJP அமைப்பு, சர்வதேச அளவில் புகழ்பெற்ற தென் ஆப்பிரிக்க நீதிபதியான யாஸ்மின் சூக்கா (Yasmin Sooka) அவர்களால் தலைமை தாங்கப்படுகிறது. இவர், இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தை விசாரிக்க அப்போதைய ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூனால் (Ban Ki Moon) நியமிக்கப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவின் மூன்று உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.

அந்தக் குழு தனது விசாரணையில், அப்பாவித் தமிழ் பொதுமக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான நம்பகமான குற்றச்சாட்டுகளைக் கண்டறிந்து அறிக்கையிட்டிருந்தது. இலங்கையின் முன்னாள் பிபிசி செய்தித் தொடர்பாளரான பிரான்சஸ் ஹாரிசன் (Frances Harrison) அவர்களும் ITJP உடன் இணைந்து பணியாற்றுகிறார்.

போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ் பொதுமக்கள் மீது நடந்த கொடூரமான கொலைகள்  குறித்து ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையில் விரிவான ஆதாரங்களைச் சமர்ப்பித்திருந்தது. தற்போது, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தடை விதிப்பது குறித்த முடிவு FCDO வசம் உள்ளது. இந்த நடவடிக்கை இலங்கையிலும், சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இலங்கைக்கு பெரும் அவகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.