சுவிஸ் நாட்டில் இருந்து, தனியார் விமானம் மூலம் கனடா ரொராண்டோ விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அதில் 400KG எடையுள்ள அதாவது 6,600 தங்கக் கட்டிகளும். மேலும் 2 மில்லியன் (பணம்) டாலர்களும் அதில் ஒரு கண்டேனரில் இருந்தது. மொத்தமாக இதன் மதிப்பு 22.5M மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த கண்டேனர், ராத்திரியோடு ராவாக காணமல் போய் விட்டது. எப்படி வெளியே சென்றது என்பது புரியாத புதிராக இருந்தது.
கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் 17ம் திகதி இந்தச் சம்பவம் கனடா ரொராண்டோ விமான நிலையத்தில் இடம்பெற்றிருந்தது. அங்கே குவிக்கப்பட்ட பொலிசார் முதல் கட்ட விசாரணையை ஆரம்பித்தவேளை. போலி ஆவணங்களை காட்டி அந்த கண்டேனரை யாரோ விமான நிலையத்தில் இருந்து கொண்டு சென்று விட்டார்கள் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, கண்டேனரை வெளியே விட்ட 2 ஏர்-கனடா ஊழியர்களை பொலிசார் கைதுசெய்து விசாரித்தவேளை. இதன் பின்னல் பெரிய ஒரு கூட்டம் இருப்பதையும். இதன் முக்கிய புள்ளியாக பரம லிங்கம் என்பவர் இருப்பதையும் கண்டு பிடித்தார்கள்.
ஆனால் கண்டேனர் எங்கே என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும் சொல்லப் போனால் வெறும் 2 தங்கக் கட்டிகளையும் , 90,000 ஆயிரம் பெறுமதியான தங்க நகைகளையும். 343,000ஆயிரம் பெறுமதியான பணத்தை மட்டுமே பொலிசார் இதுவரை கண்டு பிடித்துள்ளார்கள். இதேவேளை பரம லிங்கத்தின் மகன் பிரசாத் பரம லிங்கத்தையும், மற்றும் பரம லிங்கத்தையும் அமெரிக்காவில் வைத்து அமெரிக்க பொலிசார் கைது செய்துள்ளார்கள். இந்த 4ல் வர் போக மேலும் 2 பேரையும் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். ஆனால் எவரும் வாயே திறக்கவில்லை.
திருட்டுப் போன 22M மில்லியன் டாலர் பெறுமதியான தங்கம் மற்றும் பணத்தில், 10% சத விகிதத்தைக் கூட பொலிசாரால் கைப்பற்ற முடியவில்லை என்பது பெரும் ஆச்சரியம். ரொராண்டோ விமான நிலையத்தில் இருந்து கொண்டு சென்ற கண்டேனரை இவர்கள் எங்கோ மறைத்து வைத்துள்ளார்கள். அது நிலத்திற்கு அடியில் கூட இருக்க வாய்ப்புகள் உள்ளது. தாங்கள் ஒரு கட்டத்தில் பொலிசாரிடம் சிக்கிக் கொண்டாலும். குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் தண்டனை கிடைத்தாலும், 7 ஆண்டுகளில் வெளியே வந்து, அதனை எடுத்து விற்று செல்வந்தர் ஆகிவிடுவார்கள். இது தான் அவர்களின் திட்டமாக இருக்கக் கூடும்.
இல்லையென்றால் கூட, பிடிபட்ட 6 பேரும் சிறையில் இருக்கும் சமயமே அவர்களது நண்பர்கள் இதனை விற்று காசாக்கி விட முடியும். எனவே இந்தக் கொள்ளைச் சம்பவம் என்பது கனடா நாட்டில் இதுவரை நடக்காத பெரும் கொள்ளைச் சம்பவம் என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு தமிழர் இருப்பது… ? “என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை” …..