பிரித்தானிய அரச குடும்பத்தில் பிறந்து, தன்னையும் தனது மனைவியையும் அவர்கள் மதிக்கவில்லை என்று நாட்டை விட்டுச் சென்று தற்போது அமெரிக்காவில் குடியேறியுள்ள இளவரசர் ஹரி, தொடர்ந்து பல சிக்கல்களில் மாட்டி வருகிறார். சமீபத்தில் அவர் BBC க்கு கொடுத்த நேர்காணலில் , மன்னர் சார்ளஸ்(அப்பா) இன்னும் எத்தனை நாள் உயிரோடு இருப்பார் என்று தெரியவில்லை என்று கூறி பெரும் அதிருப்த்தியை சம்பாதித்தார்.
தனது சொந்த குடும்பத்தையே காலை வாரி, அரச குடும்பத்தை குறை சொல்லி அதனூடாக பணம் சம்பாதித்து வரும் இளவரசர் ஹரியை பிரிட்டம் மக்கள் வெறுக்கத் தொடங்கியுள்ளார்கள். இதேவேளை பிரித்தானியாவில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் செல்வந்தராக இருப்பவர் டேவிட் பெக்கம். இரவது மனைவி விக்டோரியாவும் பெரும் செல்வாக்கு மிக்கவர். இவர்களின் மூத்த மகன், புரோக்கிளின் பெக்கம், நிக்கோலா என்னும் அமெரிக்க கோடீஸ்வரியை திருமணம் முடித்தார்.
மருமகள் நிக்கோலா, டேவிட் பெக்கம் மற்றும் அவரது மனைவி விக்டோரியா பெக்கம் ஆகியோரின் சொத்து மதிப்பை விட, 10 மடங்கு சொத்து வைத்திருக்கும் பெண். அதனால் தான் என்னவோ மிகவும் தலைக்கணம் பிடித்தவர். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட சில மணக் கசப்பு காரணமாக அவர் டேவிட் பெக்கம் குடும்பத்தில் இருந்து சற்று விலகி நிற்கிறார். இதனை பேசி சரி செய்ய முடியும் என்று பெக்கம் நம்பி வரும் நிலையில். தனது மூக்கை நுளைத்துள்ளார் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மெகான்.
இன் நிலையில் இளவரசர் ஹரி மற்றும் மெகான் ஆகியோர், பெக்கம் மகனை தொடர்புகொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்கள். மேலும் அப்பா பெக்கத்தோடு பேசி சமாதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறாமல். மாறாக எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றி வருகிறார்கள், ஹரி மெகான் தம்பதிகள் என்ற செய்தி பரவ ஆரம்பித்துள்ளது. தான் கெட்டது போதாது என்று தற்போது டேவிட் பெக்கத்தின் குடும்பத்தையும் பிரிக்க நினைக்கிறார் ஹரி என்று மக்கள் வசைபாட ஆரம்பித்துள்ளார்கள்.