போலியான ட்ரோன்களை அனுப்பி பாக்கிஸ்தானை திசை திருப்பி விட்டு, இந்தியா பிரம்மேஸ்திரா ஏவுகணை ஏவி 11 பாக்கிஸ்தான் விமான நிலையங்களை அழித்துள்ளதாக பெரும் புலுடா செய்தியை வெளியிட்டுள்ளது OneIndia.com; இதில் மிகவும் வேடிக்கையான விடையம் என்னவென்றால், சுகோய்-30 மற்றும் மிக்-29 போன்ற அதிநவீன போர் விமானங்களின் தோற்றத்தில் ஆளில்லா போர் விமானங்களை (UAVs) இந்திய விமானப்படை பயன்படுத்தியதுதான் இந்தத் தந்திரத்தின் முதல் படி. என்று செய்தி வெளியிட்டுள்ளது oneindia.com
எந்த ஒரு ஆளில்லா விமானமும், MIG 29ன் வேகத்தில் செல்லாது. மேலும் எதிரி நாட்டு ராடரில் , உருவம் தெரியும். அதன் அளவு கூட துல்லியமாக தெரியும். எனவே இந்தியா மிக் 29 போல ஒரு ஆளில்லா விமானத்தை வடிவமைத்தால் கூட, அது ஆளில்லா விமானம் என்பது எதிரி நாட்டுக்கு 5 செக்கனில் புரிந்து விடும்.
இந்த நிலையில் இந்தியா இப்படி பாக்கிஸ்தானை ஏமாற்றி திசை திருப்பி விட்டு. 11 ஏவுகணைகளை ஏவி, 11 ராணுவ தளங்களை தாக்கி அழித்துள்ளதாக இந்த oneindia.com செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இதனை வாசிக்கும் போது 10 வயது சிறுவன் கூட இது போலியான செய்தி என்று அறிந்து கொள்வான்.
இது போல மிகைப் படுத்தப்பட்ட செய்திகளை போட்டு போட்டு தான், ஒரு நாட்டை நாசமாக்கும் இந்த மீடியாக்கள். இவர்கள் மோடி அரசிடம் காசை வாங்கிக் கொண்டு இதனைச் செய்கிறார்களா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.