பீஸ்ட்டு படம் செம மொக்கை: ஆனால் வலிமையை விட காசு சம்பாதித்ததாக பேசப்படுகிறது

இந்த செய்தியை பகிருங்கள்

கடந்த சில ஆண்டில், நடிகர் விஜய் நடித்த படங்களில், செம மொக்கை படம் தான்  “””பீஸ்ட்””” என்று சொல்லலாம் என்கிறார்கள் ரசிகர்கள். தமிழ் புத்தாண்டு தின விடு முறையில் படம் ரிலீஸ் ஆனதால் அது வசூலை அள்ளிக் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போட்ட காசை சன் பிக்ஸர்ஸ் எடுத்து விடும்,  ஆங்கிலப் படம் போல எடுக்கப் போய், இயக்குனர் நெல்சன் மாட்டிக் கொண்டார். ஒரு ஷாப்பிங் மாலை மையமாக வைத்து, அதற்கு உள்ளே 2 மணி நேரம் படத்தை ஓட்டியுள்ளார்கள். படத்தில் 2 பாடல் தான், ஆனால் பாடல்கள் இரண்டுமே சூப்பர்… கொரியோ  கிஃராபி அற்புதம். ஆனால் படத்தில் பல டெக்னிக்கல் தவறுகள் உள்ளது. தீவிரவாதிகள் ஷாப்பிங் மாலை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அனைத்து இடங்களையும் CCTV மூலமாக கண்காணிக்கிறார்கள். ஆனால்…

விஜய் தாக்குதல் நடத்துவதை மட்டும் அவர்கள் எப்படி பார்க்கவில்லை என்பது பெரும் கேள்வி.  முன்னர் ரா உளவு துறை அதிகாரியாக இருக்கும் விஜய் பின்னர் விலகி விட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்திய விமானப் படையின் விமானத்தை எடுத்துக் கொண்டு பாக்கிஸ்தானுக்கு சென்று , அன் நாட்டிற்கு உள்ளே புகுந்து தாக்குதல் நடத்துகிறார். யப்பா…. போதுமடா சாமி என்கிறார்கள் ரசிகர்கள்…. அது போக படத்தின் கிளைமேக்ஸ்சில் நடிகர் விஜய்,   ராணுவத்தின் தாக்குதல் விமானத்தையே எடுத்துச் சென்று பாக்கிஸ்தானில் தாக்குதல் நடத்தி, தப்பி வரும் காட்சி இருக்கே…. யப்பாடி…ஜோவ்….. செம மொக்கை போடுறாங்க ….

ஆமா நம்ம தளபதி விஜயை ஏன் உக்கிரைனுக்கு அனுப்ப கூடாது ? என்று பலர் பேஸ் புக்கில் பட்டி மன்றம் நடத்தி வரும் நிலையும் உள்ளது. அதிலும் பாக்கிஸ்தானின் 2 தாக்குதல் விமானம் துரத்த, ஏவுகணைகள் பாய, விஜய் விமானம் ஓட்டும் காட்சி அரிதான மொக்கை பீஸ்…. மொத்தத்தில் பீஸ்ட் ஒரு வேஸ்ட்….


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us