இங்கிலாந்தின் டெர்பிஷயர் மாகாணத்தில் உள்ள ஆஷ்போர்ன் நகரில் அமைந்துள்ள ஓஸ்மாஸ்டன் CofE முதன்மைப் பள்ளியில் நடந்த பரபரப்பான சம்பவம் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது! இரண்டாம் உலகப் போர் குறித்து நடந்த “காட்டி பேசு” நிகழ்ச்சியில், ஒரு மாணவன் தனது பையில் இருந்து கையெறி குண்டை எடுத்து காட்டியதால், பள்ளி முழுவதும் அவசரமாக வெளியேற்றப்பட்டது!
வெள்ளிக்கிழமை காலை நடந்த இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை ஜீனெட் ஹார்ட் கூறுகையில், “இது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக மாறிவிட்டது! ஒரு மாணவன் பழைய தோட்டா உறையைக் கொண்டு வந்திருந்தது எனக்குத் தெரியும். ஆனால், அவனது நண்பன் திடீரென தனது பையில் இருந்து ஒரு கையெறி குண்டை எடுத்து காட்டினான். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை!” என்று அதிர்ச்சியுடன் தெரிவித்தார்.
கையெறி குண்டு உயிருடன் உள்ளதா என்பது தெரியாத நிலையில், தலைமை ஆசிரியை ஹார்ட் உடனடியாக செயல்பட்டார். “அது பழையதாகத் தோன்றியது, ஆனால் ஆபத்தை எடுக்க விரும்பவில்லை,” என்று கூறிய அவர், மாணவனிடம் இருந்து குண்டை பறித்து, மிகுந்த பதற்றத்துடன் அதை பள்ளியின் கார் பார்க்கிங்கில் உள்ள ஒரு பெரிய மரத்தின் பின்னால் மெதுவாக வைத்தார். “அதை கையில் வைத்திருப்பது எனக்கு முழு நம்பிக்கையாக இல்லை, ஆனால் வேறு வழியில்லை!” என்று அவர் தெரிவித்தார்.
உடனடியாக பள்ளி வெறியேறிய நிலையில், மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். டெர்பிஷயர் காவல்துறையும், இராணுவ குண்டு அகற்றும் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். எக்ஸ்ரே உபகரணங்களைப் பயன்படுத்தி குண்டு ஆய்வு செய்யப்பட்டு, அது ஆபத்தற்றது என உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி அனைவருக்கும் பெருமூச்சு விட வைத்தது!
இந்த சம்பவம், பள்ளி நிகழ்ச்சிகளில் மாணவர்கள் கொண்டு வரும் பொருட்களை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. “இனி இதுபோன்ற ஆச்சரியங்கள் வேண்டாம்!” என்று தலைமை ஆசிரியை ஹார்ட் நகைச்சுவையுடன் கூறினார். ஆனால், இந்த பரபரப்பான நிகழ்வு டெர்பிஷயர் மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது!