தமிழ் ஈழம் எங்கிலும் அலையென திரண்ட மக்கள் கூட்டம்: மே 18 நிகவு !

பொதுவாக புலம்பெயர் தேசங்களில் தான் மே 18 நிகழ்வு நடைபெற்று வந்தது. இலங்கையில் அதனை நினைவு கூர்ந்தால் அது குற்றச் செயலாக கருதப்பட்டது. ஆனால் அனுரா வந்த பின்னர் இந்த விடையங்கள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில். ஈழத்தில் மக்கள் சிறிதும் அச்சம் இன்றி பல இடங்களில் மே 18 நினைவேந்தலை நடத்தியுள்ளார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்ட விடையம், பல உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் ஆயிரக் கணக்கில் மக்கள் திரண்டு இருந்தார்கள், அதேபோல குறுமன் காட்டில் உள்ள பிள்ளையார் கோவிலில் மக்கள் பூஜைகளை செய்தார்கள். மன்னார் பஸாரில் பெரும் நிகவு நடைபெற்றது. மட்டக்களப்பிலும் பெரும் நிகழ்வுகள் நடைபெற்றது. விஸ்வமடும் மற்றும் யாழ்ப்பாணத்திலும் நினைவேந்தல்கள் நடைபெற்றுள்ள நிலையில்.

லண்டனிலும் பெரும் எடுப்பில் நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. இதனை பிரித்தானிய TTC ஒழுந்து செய்து இருந்தது. இதில் பெரும் தொகையான மக்கள் கலந்துகொண்டு இருந்தார்கள்.