இத்தனை லட்சமா…? ஷங்கர் மகள் திருமணத்தில் ஜொலித்த நயன்தாராவின் வாட்ச்!

இத்தனை லட்சமா…? ஷங்கர் மகள் திருமணத்தில் ஜொலித்த நயன்தாராவின் வாட்ச்!

நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கும் நடிகை நயன்தாரா தென் இந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல இயக்குனரான விக்னேஷ் இவனை காதலித்து 8 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோர்கள் சமாதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான ஒரு சில மாதத்திலேயே வாடகை தாய்முறையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் நயன்தாரா சமீப நாட்களாக எங்கு சென்றாலும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவியது.

அந்த வகையில் அண்மையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தில் விக்னேஷ் சிவனோடு கலந்து கொண்ட நடிகை நயன்தாரா லாவண்டர் கலரில் அழகான காட்டன் சேலை அணிந்து கொண்டு மிகவும் சிம்பிளாக எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

ஆனால் சேலை மட்டும் தான் சிம்பிள் அவர் அணிந்திருந்த வாட்ச் இன் விலை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க. ஆம், ரோலக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல் 36. பிங்க் நிற டயல் மற்றும் சிப்பி பிரேஸ்லெட் கொண்ட அந்த வாட்ச் Oystersteel என்ற உலோகத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த வாட்ச் எப்போதும் மினுமினுப்புடன் கண்களைப் பறிக்கும் அழகுடன் இருக்குமாம். இந்த ஸ்டைலிஷ் வாட்ச் விலை ரூ.5.30 லட்சம் என்று கூறப்படுகிறது.