“சொர்க்கத்தில் இடம் உண்டு” அதகளம் செய்த சூப்பர் ஸ்டார் – “கூலி” டீசர்!

“சொர்க்கத்தில் இடம் உண்டு” அதகளம் செய்த சூப்பர் ஸ்டார் – “கூலி” டீசர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171 திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கூலி என டைட்டில் வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ இன்று வெளியாகி இணையத்தை அதகளம் செய்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அனிருத் அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த டீசரில் ஒரு கேங்ஸ்டர் கும்பல் துறைமுகத்தில் பலவகையான தங்கத்தை கடத்தி அதை அனுப்புவதற்காக அவசரமாக பேக்கிங் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு போன் காலில்…. துறைமுகத்தில் செக்யூரிட்டி அடித்து விட்டு ஒருவன் உள்ளே வருகிறான் ஜாக்கிரதை என ஒரு தகவலை கூற உடனே அந்த கடத்தல் கும்பல் சேர்ந்து வந்து ரஜினியை தாக்க முற்படுகிறார்கள்.

ஆனால் ரஜினி அதற்குள் அவர்கள் அனைவரையும் அகலம் செய்துவிட்டு அந்த மொத்த தங்கத்தையும் அள்ளிக் கொள்கிறார். அதை என்ன செய்கிறார் என்பது இந்த படத்தின் மூலம் பார்க்கலாம்.கிட்டத்தட்ட 73 வயதாகும் ரஜினி பார்ப்பதற்கு மிகவும் இளமையான தோற்றத்தில் வழக்கம் போலவே அதிரடி ஆக்சன் காட்சிகளில் மிரட்டி எடுத்திருக்கிறார்

இந்த ட்ரைலரில், “சோறுண்டு சுகமுண்டு மது உண்டு மாது உண்டு மனமுண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு” என ரஜினி மாஸாக பேசியுள்ள டயலாக் ரஜினியின் வெறியன்களை கொண்டாட வைத்துள்ளது. நாடி… நரம்பு… ரத்தம்… சதை… புத்தி எல்லாத்துலயும் சினிமா வெறி ஊறிப்போன ஒருத்தனாலதான் இப்படிலாம் படம் எடுக்க முடியும்…. அது லோகேஷ் கனகராஜால் மட்டும் தான் முடியும். இதோ அந்த டீசர்: