Posted in

92 வயதில் கற்பழித்து கொலை செய்த குற்றத்திற்காக கைதான றே-லன் என்னும் நபர் !

1967ம் ஆண்டு லூயிஸ் என்னும் 75வயது மூதாட்டியை கற்பழித்து, கழுத்தில் சுருக்கு கயிறு போட்டு அவரைக் கொன்று விட்டு தப்பியுள்ளார் றே-லன் ஹெட்லி என்னும் நபர். அவருக்கு தற்போது 92 வயது. 1967களில் DNA மூலம் பரிசோதனை செய்வது என்பது இயலாத காரியமாக இருந்தது.

மேலும் பிரித்தானியாவில் 1977ம் ஆண்டு அதே இடத்தில் மேலும் 2 பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருந்தார்கள். இந்த வழக்கும் நிலுவையில் இருந்து வந்த நிலையில். இறந்து போன 75வயது மூதாட்டியின் பாவாடையில் ஒட்டி இருந்த முடி ஒன்றை பொலிசார் 57 வருடங்களாக பாதுகாத்து வந்தார்கள். இன் நிலையில். 2 பெண்கள் கற்பழிக்கப்பட்ட வழக்கில் சிக்கிய , இன் நபரின் DNA வை, குறித்த முடியோடு ஒப்பிட்டு பார்த்துள்ளார் ஒரு சி.ஐடி அதிகாரி.

அதிர்ந்து போனார், அது சரியாக ஒத்துப் போகிறது. இதனால் 2024ம் ஆண்டு 92 வயதாகி இருந்த றே-லன் ஹெட்லியை பொலிசார் கைதுசெய்து சிறையில் அடைத்த நிலையில். அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் நேற்றைய தினம்(30) அடையாளம் கண்டுள்ளது.

இதனை அடுத்து அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட உள்ளது. அவர் இனி மீண்டு வரமுடியாது என்பது பலர் அறிந்த உண்மை. பிரிட்டன் பொலிசாரைப் பொறுத்தவரை அவர்கள் எந்த ஒரு வழக்கையும் மூடுவது இல்லை. விடை கிடைக்கவில்லை என்றால் நிலுவையில் வைத்திருக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *