இலங்கை அரசுக்கு விழுந்துள்ள பெரும் இடி இது தான். இலங்கையில் உள்ள பல அமெரிக்க கம்பெனிகள் இலங்கையை விட்டு வெளியேற நடவடிக்கையில் இறக்கும் என அதிர்வு இணையம் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தது. காரணம் அமெரிக்க அதிபர் டொனால் ரம் இலங்கைக்கு போட்டுள்ள வரி. அதாவது இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 46% சத விகித வரியை ரம் விதித்துள்ளார்.
இதனை உடனே பேசி தீர்த்து இருக்க முடியும். ஆனால் அனுரா அரசு மெதுவாக நகர்ந்ததால் இந்த பெரிய அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. கட்டநாயக்க சுதந்திர வர்த்த வலையத்தில் கடந்த 33 வருடங்களாக செயல்பட்டு வந்த NEXT ஆடை நிறுவனம், திடீரென ஒரே இரவில் தனது செயல்பாடுகள் அனைத்தையும் மூடியுள்ளது. இதனால் 1,400 சிங்கள பெண்கள் வேலையை இழந்து நடுத்தெருவில் உள்ளார்கள்.
காலையில் வேலைக்குச் சென்ற பெண்களுக்கு பெரும் அதிர்ச்சி தான் காத்திருந்தது என்று BBC சிங்கள சேவை தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. NEXT நிறுவனம் பல ஆடைகளை இலங்கையில் தைத்து அதனை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஆனால் ரம் விதித்த வரியால் அவர்களால் இயங்க முடியாத நிலை தோன்றியுள்ளது.
இது போல இன்னும் எத்தனை கம்பெனிகள் இழுத்து மூடப்பட உள்ளதோ தெரியவில்லை. அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதியாகும் பொருட்களின் வரியை உடனடியாக 0% விகிதமாக இலங்கை மாற்றினால். ரம் தனது வரி திட்டத்தை தளர்த்துவார். மேலும் சொல்லப் போனால் ரப்பர் ஏற்றுமதி மாணிக்க கல் என்று பல ஏற்றுமதிகள் தடைப்பட உள்ளது.