இஸ்ரேலை எப்படி இரும்பு கோட்டை பாதுகாக்கிறதே, அதே போல முழு அமெரிக்காவையும் பாதுகாக்க கோல்டன் கோட்டை ஒன்றை நிறுவ அதிபர் டொனால் ரம் முடிவு செய்துள்ளார். ரஷ்யா மற்றும் சீனா எந்த ஒரு ஏவுகணையை ஏவினாலும் அது அமெரிகா மீது விழுந்து வெடிக்காது. அவை நடு வானில் அல்லது தொலைவில் வைத்தே தகர்கப்பட்டு விடும். ஆனால் இதன் மொத்தச் செலவு 130 பில்லியன் டாலர்கள் ஆகும்.
அமெரிக்காவால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத பணம் இது. 13 லட்சம் கோடி டாலர்கள் ஆகும். சொல்லப் போனால் (£130,000,000,000) இத்தனை பூஜ்ஜியங்கள் வருகிறது. இஸ்ரேலுடன் இணைந்து இந்த கட்டமைப்பை உருவாக்கினால், உலகில் உள்ள எந்த ஒரு நாடும் அமெரிக்காவை தாக்கவே முடியாது. பெரும் கவசம் ஒன்று அமெரிக்காவை நிலையாக பாதுகாக்கும்.
ஆனால் இதற்கான நிதியை எப்படி என்றாலும் எடுத்து, 2028ம் ஆண்டு ஜூன் மாதம் , இதனை கட்டி முடிப்பேன் என்று டொனால் ரம் சபதம் பூண்டுள்ளார். இது மட்டும் நடந்து விட்டால் , உண்மையில் அமெரிக்கா அதி கூடிய பாதுகாப்பு நாடாக மாறிவிடும். ஆனால் இந்த யோசனையை சொன்னது யார் என்பது பெரும் கேள்வி. அத்தோடு இது போன்ற பெரிய ஐடியாக்களை கொடுக்கும் கம்பெனிகள், தாம் பெரும் லாபத்தை சம்பாதித்து விடுவார்கள். ஆனால் பின்னர் இது சரியாக வேலை செய்கிறதா ? என்பது பெரும் கேள்விக் குறியாக இருக்கும் .
இப்படி பல கேள்விகள் உள்ளது. ஆனால் அமெரிக்காவை பாதுகாக்கப் போகிறேன் என்று தற்போது ரம் இறங்கியுள்ள விடையம் சரிந்து கொண்டு செல்லும் அவரது செல்வாக்கை தூக்கி நிலை நிறுத்துமா என்பது தெரியவில்லை !