விதையில் இருந்து உடல் முழுவதும் பரவிய புற்றுநோய் ஜோ பைடன் நாட்களை எண்ணுகிறாரா ?

அமெரிக்க முன் நாள் அதிபர் ஜோ பைடனுக்கு, புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கியுள்ளது. அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2வது தடவை போட்டியிட முன்னரே அவருக்கு இந்த புற்று நோய் இருந்ததாகவும். ஆனால் மனைவி ஜில் பைடன் இதனை மறைத்து, அவரை 2வது முறை போட்டியிட தூண்டியதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளது. தற்போது அவரது உடல் நிலை சற்று மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

புரோஸ்டேட் என்று சொல்லப்படும் புற்று நோய் ஆண்களின் விதைப் பைகளில் முதலில் உருவாகி, பின்னர் படு வேகமாக உடலின் ஏனைய பாகங்களுக்கு பரவுகிறது. பொதுவாகச் சொல்லப் போனால், மேற்கு உலக நாடுகளில் 20 ஆண்களில் ஒருவரை இந்த புற்று நோய் தற்போது தாக்கி வருகிறது. ஆண்கள் உறவில் ஈடுபடும்போது வெளியாகும் விந்தணு ஈரத் தண்மையாக இருக்க, சுரக்கும் ஒரு வகை சுரப்பி தான் இந்த புரோஸ்டேட் சுரப்பி. ஆனால் வயதாக வயதாக ஆண்கள், சிலர் உடல் உறவைக் குறைத்துக் கொள்வதால்.

இந்த புற்று நோய் ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம் விந்தணு வெளியேறாமல் இருப்பது. இதனால் இந்த சுரப்பி தொடர்ந்து ஒரு பதார்தத்தை சுரந்து கொண்டு இருந்து, அவை தேங்கி நாளடைவில் , புற்று நோய் உருவாகிறது. ஆண்களின் உடல் கட்டமைபைப் பொறுத்தவரை அவர்கள் 73 வயது வரை உடல் உறவு வைத்துக் கொள்ள முடியும். ஆனால் பெண்களை பொறுத்தவரை 48 வயதோடு அவர்களது மாத விடாய் நின்று பொதுவாக 50 வயதில் கருப்பை செயல் இழந்து விடுகிறது.

ஆனால் ஒரு மிகவும் ஆரோக்கியமான ஆண் மகனால் 73 வயதில் கூட ஒரு ஆரோக்கியமான பிள்ளையை உருவாக்க முடியும். அந்த வகையில் தான் ஆண்கள் இயற்கையாகவே பரிணாம வளர்ச்சியடைந்துள்ளார்கள். ஆனால் தற்போதைய நவீன உலகில், 30 வயதிலேயே ஆண்கள் கடுமையான மன அழுத்தம், வேலைப் பழு, என்று பல காரணிகளால் , தமது தாம்பத்திய வாழ்கையை தொலைத்து விட்டு. வேலை வேலை என்று அலைகிறார்கள்.

இதன் காரணத்தால் தான் இந்த ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயும் மிகவும் அதிகரித்துள்ளது. இந்த புற்று நோயில் இரண்டு வகை உண்டு. ஒன்று படு வேகமாக பரவும். மற்றையது மெதுகாகப் பரவும். இதில் கடுமையான வேகத்தில் பரவும் புற்று நோய் தான் முன் நாள் அதிபர் ஜோ பைடனை தாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் அவர் முள்ளம் தண்டு வரை இந்த புற்று நோய் பரவியுள்ளது என்று கூறப்படுகிறது.