67 பெண்களை கர்பமாக்கிய நபர்: அனைவருக்கும் புற்று நோய் வருகிறது இயற்கையோடு விளையாடுவது சரியா

சில வேளைகளில் இயற்கையோடு விளையாடுவது, மிகவும் பாதகமான செயலாக அமைந்து விடும். தற்போதைய நவீன உலகில், கணவர் தேவை இல்லை காதலனும் தேவை இல்லை ஆனால் பிள்ளை மட்டும் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் பெருகி விட்டார்கள். இதனால் யார் என்றே தெரியாத ஒரு நபரின் விந்தை எடுத்து தனது வயிற்றினுள் செலுத்தி கர்பமாகி பிள்ளையை பெற்றுக் கொள்கிறார்கள் பெண்கள்.

இது சமீப காலமாக பல லட்சமாக பல்கிப் பெருகியுள்ளது. இன் நிலையில் ஒரு ஆண் மகன் தனது விந்தணுவை ஸ்பேம் வங்கிக்கு விற்றுள்ளார். இதனை பாவித்து சுமார் 67 பெண்கள் பர்பமாகி பிள்ளைகளை பெற்றுள்ள நிலையில். அதில் 10 பிள்ளைகளுக்கு ஒருவகையான புற்று நோய் உருவாகியுள்ளது. அவர்களின் அப்பா ஒரே ஆள். இதனால் மீதம் உள்ள, 57 பிள்ளைகளுக்கும் , அதே புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மருத்துவர்கள் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.

அதாவது புற்று நோயை ஏற்படுத்தும் ஜீன்களை (மரபணுவை) இந்த நபர் கொண்டுள்ளார். ஆனால் அவர் பல நூறு தடவை விந்தணுவை தானம் செய்து பணத்தைப் பெற்றுள்ளார். இதனால் பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. இப்படிச் செய்வது சரிதானா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. குறித்த நபர் ஒரு பெண்ணை திருமணம் முடித்து இருந்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை மட்டுமே பாதிப்படைந்து இருக்கும்.

ஆனால் தற்போது 67 பிள்ளைகள் இதனால் பாதிப்படைந்து உள்ளார்கள் என்று பார்க்கும் போது, ஒரு வகையில் இதுவும் கொலை தான்.