அணு குண்டு வெடித்தால் பாவிக்கப்படும் Anti-radiation medicine மருந்தை வாங்கிக் குவிக்கும் ஐரோப்பிய நாடுகள் !

இந்த செய்தியை பகிருங்கள்

பிரித்தானியா உட்பட பல ஐரோப்பிய நாடுகள், ரகசியமாக அன்ரி ரேடியேஷன் மருந்துகளை வாங்கி குவித்து வருகிறது. அணு குண்டு வெடித்தால் அதில் இருந்து வெளியாகும் கதிர் இயக்கம் கொண்ட துகள்கள் காற்றில் பரவும். இதனை சுவாசிக்கும் நபர்களுக்கு அதன் தாக்கம் ஏற்படும். இதனை தவிர்த்துக் கொள்ள அல்லது கட்டுப்படுத்த மருந்துகள் உள்ளது. அந்த மருந்துகளை அமெரிக்கா ஜப்பான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் இருந்து, பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே கொள்வனவு செய்து, கையிருப்பில் வைத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. ரஷ்யா என் நேரமானாலும் ஐரோப்பிய நாடுகள் அல்லது உக்கிரைன் மீது அணு குண்டை ஏவலாம் என்று, பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில்…

இந்த தகவலும் வெளியாகியுள்ளது. இதனை உக்கிரைன் அதிபரும் உறுதி செய்துள்ளார். ரஷ்யா இனி அணு குண்டை ஏவக் கூடும் என்ற அச்சத்தை அவர் வெளியிட்டுள்ளதோடு. அதன் பாதிப்பில் இருந்து தப்ப, மருந்துகளை கொள்வனவும் செய்யுங்கள் என்றும் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us