இலங்கையை வாங்க எலான் மஸ்குக்கு ஆலோசனை

இந்த செய்தியை பகிருங்கள்

ட்விட்டருக்குப் பதிலாக இலங்கையை வாங்குமாறு ட்விட்டர் பயனர்கள் டெஸ்லாவின் எலோன் மஸ்க்கிடம் கூறியுள்ளனர்.

ட்விட்டரின் முழுப் பங்குகளையும் 41 பில்லியன் டொலருக்கு (சுமார் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்கத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கடந்த 14ஆம் திகதி அறிவித்தார். ட்விட்டரில் நிறுவனத்தின் சுமார் 9 சதவீதத்தை வைத்திருக்கும் அவர், அடுத்த இரண்டு நாட்களில் அதன் இயக்குநர் குழுவில் இருக்கப் போவதில்லை என்று அறிவித்தார்.

இந்த நிலையில், ட்விட்டரை வாங்குவதற்குப் பதிலாக இலங்கையை வாங்குமாறு ட்விட்டர் பயனாளர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு ட்விட்டர் பயனர் கூறுகையில், “நீங்கள் (எலோன் மஸ்க்) ஏதாவது வாங்க விரும்பினால், இலங்கையை வாங்குங்கள். ட்விட்டரை விட்டு வெளியேறுங்கள்.”

“நீங்கள் இலங்கையை 41 பில்லியன் டொலருக்கு (சுமார் ரூ. 3.12 லட்சம் கோடி) வாங்க விரும்புகிறீர்களா? உங்கள் டெஸ்லா இங்கு சிறந்த கிராஃபைட்டைப் பெறும்.” இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us