வெறுப்பில் உள்ள ரஷ்யா போலந்தில் உள்ள நேட்டோ தளத்தை தாக்கக் கூடும் என கடும் எச்சரிக்கை !

இந்த செய்தியை பகிருங்கள்

போலந்து ஊடாக பல ஐரோப்பிய நாடுகள், உக்கிரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதால். ரஷ்ய படைகளின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் போர் முடிந்து, முழு உக்கிரைனையும் கைப்பற்றி விட முடியும் என்று கணக்குப் போட்ட புட்டின் கனவில் மண் வீழ்ந்தது தான் மிச்சம். இதனால் கடும் வெறுப்பில் உள்ள புட்டின் போலந்தில் உள்ள நேட்டோ சப்பிளை தளத்தை தாக்கக் கூடும் என்று, பிரித்தானியாவின் முன் நாள் பாதுகாப்பு துறை அதிகாரி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏவுகணைகளைக் கொண்டு போலந்தில் உள்ள நேட்டோ தளத்தை தாக்கி அழிக்க புட்டின் , ஆலோசிப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அப்படி நடக்கும் என்றால்…

உடனடியாக நேட்டோ நாடுகள் ரஷ்ய நிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்தும். இதில் பிரித்தானியாவும் இணைந்து கொள்ளும். இது 3ம் உலகப் போரை நிச்சயம் தூண்டும் விதத்தில் அமையும் என்பதில் அச்சம் இல்லை.   Source : ‘Increasingly desperate’ Vladimir Putin could attack a NATO base to stop the western weapons that are stalling his invasion from getting to Ukrainian forces, ex-national security chief warns


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us