வங்கதேசத்தில் நடப்பது என்ன…? அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை… மறுக்கும் வங்கதேசம்…!!!

இந்த செய்தியை பகிருங்கள்

அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் அறிக்கையில் வலுக்கட்டாயமாக மாயமாதல், சட்டத்திற்கு புறம்பாக கொலை செய்யப்படுவது, கருத்து சுதந்திரம், தேர்தல் வழிமுறைகள் ஆகிய பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை உண்மைக்கு மாறாக உள்ளது என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, வங்கதேசத்தில் இருக்கும் மனிதநேய உரிமைகளின் எதார்த்தம் அந்த அறிக்கையில் இல்லை. பாரபட்சமான அறிக்கையாக இருக்கிறது. பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளை மேம்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஐநா மனித உரிமைகள் அமைப்போடு வங்கதேச அரசு சேர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற சர்வதேச கூட்டாளிகள் அனைவரிடமிருந்தும் வங்கதேச அரசு சரியான பரிந்துரைகளை ஏற்கிறது. இந்த அறிக்கையானது, சமூகம் மற்றும் அரசை சீர்குலைக்கக்கூடிய விதத்தில் சட்டத்திற்கு மாறான சமூகத்தை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கிறது.

மக்களது நல வாழ்வை மேம்படுத்துவதற்காகவும், உரிமைகளையும், கண்ணியத்தையும் உறுதிப்படுத்த தேவைப்படும் முயற்சிகளை தொடர்வதற்காக அரசு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us