200 நாடுகள் தேடியும் சிக்காமல் இருந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன்.. காதலியால் சிக்கியது எப்படி?

இந்த செய்தியை பகிருங்கள்

மெக்சிகோவை நாட்டைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் பிரையன் டோனாசினா. எல் பிட் என்று அழைக்கப்படும் இவர் 200-க்கும் மேற்பட்ட நாடுகளால் குற்றவாளியாக தேடப்பட்டு வந்தார்.

இன்டர்போல் கண்களில் மண்ணை தூவிவிட்டு பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து கொண்டே தனது தொழிலை சிறப்பாக செய்து வந்த எல். பிட் தமது காதலியால் தற்போது போலீசில் சிக்கி உள்ளார்.

பிரையன் டோனாசினா தனது காதலியுடன் கொலம்பியாவில் உள்ள கலி என்ற இடத்தில் சமீபத்தில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது சுற்றுலாத் தளத்தில் இருவரும் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படத்தை இவரது காதலி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதனை வைத்து எல் பிட்டின் இருப்பிடத்தை மோப்பம் பிடித்த போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அவரை லாவகமாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கொலம்பியாவை சேர்ந்த தமது முன்னாள் போராளி இயக்கத்தை சமீபத்தில் தொடர்பு கொண்ட எல் பிட், மெக்ஸிகோவுக்கு கப்பல் மூலம் செல்ல இருந்த போதைப்பொருட்களை ஆய்வு செய்துள்ளார். அந்த வேலையை வெற்றிகரமாக முடிந்த கையோடு தன் காதலியை தேடி சென்று அவருக்கு முத்தத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த அந்தரங்க புகைப்படத்தை இவரது காதலி ஃபேஸ்புக்கில் பதிவிட, அதுவே பிரையன் டோனாசினாவுக்கு வினையாக அமைந்துவிட்டது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us