கடந்த 3 ஆண்டுகளில்(கொரோனாவுக்குப் பின்னர்) பிரித்தானியாவில் முன் எப்பொழுதும் இல்லாதவாறு கடைத் திருட்டு அதிகரித்துள்ளது. இந்த கடை திருட்டு என்பது சுமார் 45% சத விகிதத்தால் அதிகரித்துள்ளது என ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. பொதுமக்களே இவ்வாறு திருடர்களாக மாறியுள்ளார்கள். காரணம் அவர்கள் கைகளில் பணம் இல்லை. அதுபோக பள்ளிச் சிறார்களும் கடைகளில் திருட ஆரம்பித்துவிட்டார்கள். காரணம் அப்பா அம்மா கைச் செலவுக்கு பணம் கொடுப்பது இல்லை. ஏன் என்றால் அவர்கள் கைகளிலும் பணம் இல்லை.
பிரித்தானியாவில் பல நூறு தமிழர்கள் கடைகளை வைத்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் இதே பிரச்சனையைத் தான் எதிர்கொண்டும் வருகிறார்கள். டெஸ்கோ போன்ற சூப்பர் மார்கெட்டுகள், ஆண்டுக்கு கடை ஒன்றுக்கு தலா £18,000 தொடக்கம் £26,000 பவுண்டுகள் வரை நஷ்டம் அடைவதாக கூறப்படுகிறது. இவை அனைத்துமே திருட்டு போகும் பொருட்களால் தான் என்று கூறப்படுகிறது. பெரிய பெரிய கம்பனிக்கே இந்த நிலை என்றால், சிறிய கடைகளை வைத்திருப்பவர்கள் நிலை மேலும் பரிதாபம் தான்.
நேற்று முன் தினம் லண்டனில் நடந்த சம்பவம் ஒன்றால், பிரித்தானியாவே அதிர்ந்துள்ளது. டெஸ்கோ எக்ஸ்பிரஸ் சூப்பர் மார்கெட் ஒன்றில் ஒரு நபர் தனது பையில் பல உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டு, காசைக் கட்டாமல் வெளியேற முற்பட்டுள்ளார். அவரை காவல் அதிகாரி கையும் களவுமாகப் பிடித்தவேளை. அன் நபர் காவல் அதிகாரியை கிடுக்கிப் பிடிபோட்டு பயமுறுத்தி அங்கிருந்து தப்பிச் சென்ற CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. கீழே இணைப்பு.
Shop thieves at Tesco in reading
( reading official) pic.twitter.com/iOKBY8UAab
— London & UK Street News (@CrimeLdn) April 29, 2024