அவர் கூடலாம் நடிக்க முடியாது… பிரபல நடிகரால் பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய நயன்தாரா!

அவர் கூடலாம் நடிக்க முடியாது… பிரபல நடிகரால் பிரம்மாண்ட படத்தில் இருந்து விலகிய நயன்தாரா!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வளர்ந்து வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களில் அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் படு பிஸியாக நடித்த வருகிறார்.

அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகும் வரலாற்று திரைப்படமான “கண்ணப்பா” என்கிற திரைப்படத்தில் கமிட்டாகி இருந்தால் நடிகை நயன்தாரா. இப்படத்தில் நயன்தாரா பார்வதி கடவுளாக நடிக்க ஒப்பந்தமாக இருந்த நிலையில் இப்படத்தில் சிவன் கதாபாத்திரத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்திருந்தார்.

பாகுபலி பட புகழ் நடிகர் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர். அதேபோல் நயன்தாராவுக்கும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருந்தார். ஆனால் தற்போது திடீரென அந்த படத்தில் இருந்து பிரபாஸ் விலகி விட்டார். அடுத்து பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார் பார்வதிக்கு ஜோடியாக அதாவது நயன்தாராவுக்கு ஜோடியாக சிவன் கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகினாராம்.

ஆனால் இது நயன்தாராவுக்கு பிடிக்காமல் போக அவருடன் நடிக்க விருப்பம் இல்லாமல் நயன்தாரா படத்திலிருந்து விலகி விட்டாராம். இதை எடுத்து பார்வதி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை காஜல் அகர்வால் நடிக்க மற்றும் அக்ஷய் குமார் ஹீரோவாக சிவன் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகிறது. இருந்தாலும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது. குறிப்பிடுத்தக்கது.