மாமனும் மச்சானும் மோதல்: Secrte SEX FILE அவுத்து விட்ட எலான் மஸ்க்

மாமனும் மச்சானும் போல இருந்த, டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் மற்றும் டொனால் ரம்புக்கு இடையே பெரும் முறுகல் நிலை தோன்றியுள்ளது. ரம் கொண்டு வந்த புது மசோதாவை கடுமையாக சாடியுள்ளார் எலான் மஸ்க். இதற்கு பதிலடியாக எலான் மஸ்க், வெள்ளை மாளிகைக்கு உள்ளே காலடி எடுத்து வைக்க கூடாது என்று, ரம் அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுக்க.

இரே இரவில் எலான் மஸ்கின் எல்லா சிறப்புச் சலுகைகளையும் வெள்ளை மாளிகை ரத்துச் செய்ய, பெரும் புயல் கிளம்பியுள்ளது. எலான் மஸ்க்கும் லேசுப்பட்ட ஆள் இல்லை. அமெரிக்க அதிபர் என்று கூடப் பாராமல், டொனால் ரம் மேல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று சற்று முன்னர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அது போக

ஜெப்ஃரி எப்ஸ்டன் என்ற பெரும் செக்ஸ் ததாவுடன், டொனால் ரம் எடுத்த புகைப்படத்தையும் எலான் மஸ்க் வெளியிட்டு, ரம்பை கடுமையாக கொச்சைப்படுத்தியுள்ளார். எப்ஸ்டன் என்ற பெரும் தாதா, எண்ணில் அடங்காத செல்வந்தராக இருந்தார். அவருக்கு என்று ஒரு தனித் தீவு. அங்கே பல நாட்டு ஜனாதிபதிகள், பிரதமர்கள், மந்திரிகள் என்று அனைவரும் செல்வது வழக்கம். பொதுவாக 15 தொடக்கம் 21 வயது அழகான பெண்களை, கடத்தி வந்து அந்த தீவில் பெரும் விபச்சார விடுதியை நடத்தி வந்தவர் எப்ஸ்டன்.

பெரும் அரசியல் செல்வாக்கு மிக்க எப்ஸ்டனை, அமெரிக்க FBஈல் கூட நெருங்க முடியவில்லை. பின்னர் நடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னரே, அமெரிக்க புலனாய்வுத் துறை அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க, அவர் அங்கேயே தற்கொலை செய்து கொண்டார். இவரோடு சேர்ந்து அந்த தீவுக்கு சென்று வந்த முக்கியஸ்தர்களில் மன்னர் சார்ளசின் தம்பியும் அடங்குவார், இதானல் இன்றுவரை அமெரிக்க புலனாய்வுத் துறை பிரித்தானிய மன்னர் சார்ளசின் தம்பியை விசாரிக்க வேண்டும் என்று பல விண்ணப்பங்களை அனுப்பி வருகிறது.

இந்த நிலையில் எப்ஸ்டனுடன் டொனால் ரம் நிற்க்கும் புகைப்படம் வெளியாகி அமெரிக்காவையே ஒரு கலக்கு கலக்கி வருகிறது. இந்தச் சண்டை எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இதேவேளை டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. ரம் வெற்றியடைந்தவேளை மேடையில் துள்ளிக் குதித்து நடனம் ஆடியவர் எலான் மஸ்க் என்பதனை மறந்து விட முடியாது !