வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், தங்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களுக்கு ஆயுதங்கள் தேவை என்றும் கூறினார். முதன்மையாக தற்காப்பு ஆயுதங்கள் அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் சில ஆயுத உதவிகளை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஷ்யாவுடனான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், டிரம்ப் ரஷ்ய அதிபர் புதினின் செயல்பாடுகள் குறித்து தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார்.