மாணவிக்கு ஆபாச மெசேஜ்… பேராசிரியர் தலைமறைவு… நாகர்கோவில் பரபரப்பு

இந்த செய்தியை பகிருங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் பகுதியில் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் பயின்று வருகின்றனர். இங்கு பயின்று வரும் ஒரு மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் சமூக வலைத்தளம் மூலமாக ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவர்களிடையே சலசலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட பேராசிரியர் அங்கிருந்து மாயமானார்.

இந்நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்காக கல்லூரி நிர்வாக தரப்பில் இருந்து அலைபேசியில் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில், அவரது அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால், தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அந்தக் கல்லூரியின் பேராசிரியர்கள் தரப்பில் கூறுகையில், மாணவி மற்றும் பேராசிரியர் இடையே கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளம் மூலமாக குறுஞ்செய்தி பரிமாற்றம் நடைபெற்றதாகவும் இருதரப்பிலும் தவறு இருப்பதாக கூறினர்.

தமிழ் பெண்ணுடன் 6 மாதம் ‘லிவிங் டு கெதர்’… டாட்டா காட்டிய சேட்டன்… என்ன நடந்தது?

இருப்பினும் குருவின் இடத்திலிருந்து கல்வி போதிக்கும் பேராசிரியர் ஒருவர், மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us