தமிழ் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் நடிகையாக பார்க்கப்படுபவர் தான் அர்ச்சனா. இவர் சீரியல் நடிப்பது வருவதற்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக இருந்து வந்தார். அதன் பிறகு சீரியல்களில் வாய்ப்பு கிடைக்க ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் இத்தார்.
அந்த சீரியலில் இவரது நடிப்பு பக்கவாக அவ்வளவு சூப்பராக அசதி இருப்பார். இதனால் இவருக்கு பெருமளவு ரசிகர்கள் உருவாகினர். இவர் சீரியலில் தான் வில்லியாக நடித்திருப்பார். ஆனால் நிஜத்தில் நல்ல குணம் கொண்ட அர்ச்சனாவாக பார்க்கப்பட்ட வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆகினார்.
குறிப்பாக அந்த நிகழ்ச்சியில் இவரது நடவடிக்கை எல்லாமே பெருவாரியான ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அர்ச்சனாவின் மவுஸ் வேற லெவலில் கூடிவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையை தற்போது தனது காதலன் யார் என்பதையும் உறுதிப்படுத்திவிட்டார் அர்ச்சனா.
ஆம் பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோவான அருண்பிரசாத் உடன் அர்ச்சனா பல வருடமாக காதலித்து வருகிறார் என்பது செய்திகள் கிசுகிசுவாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது உறுதியாகிவிட்டது. அதாவது தற்போது அருண் ஒரு போட்டோஷூட் நடத்தி இருக்கும் அந்த போட்டோவை இன்ஸ்டால் வெளியிட்டு இருக்கிறார்.
அந்த ஃபோட்டோ வீடியோ கமெண்டில் அர்ச்சனா “தேங்க்ஸ் ஃபார் சூட்டிங் மை ஹீரோ” என போட்டோகிராபர்க்கு நன்றி கூறியிருக்கிறார். அதற்கு பதிலுக்கு அருண் பிரசாத் நன்றி கூறியிருக்கிறார். அருண் பிரசாத் அர்ச்சனாவின் இந்த ஜோடி மிகச் சிறப்பான ஜோடி பொருத்தமான ஜோடி என பலர் கமெண்ட் செய்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.