நண்பேன்டா.. ஊரடங்கில் கிடைத்த வித்தியாசமான நட்பு.. இளைஞருடன் சிகரெட் பிடிக்கும் காகம்

இந்த செய்தியை பகிருங்கள்

நண்பேன்டா.. ஊரடங்கில் கிடைத்த வித்தியாசமான நட்பு.. இளைஞருடன் சிகரெட் பிடிக்கும் காகம்

இங்கிலாந்திலுள்ள கிழக்கு சஸ்செஸ் பகுதியைச் சேர்ந்தவர் பீட்.இவர் ஒரு தொடர் புகைப்பழக்கம் உடைய நபர். பீட்டுக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

 


கொரோனா தோற்று பரவல் தொடங்கிய 2020ல் உலகமே ஊரடங்கில் முடங்கிக் கிடந்த வேளையில், பீட் தனது பெரும்பாலான நேரத்தை தன்னுடைய தோட்டத்திலேயே செலவழித்திருக்கிறார். அப்படி ஒரு முறை தனது தோட்டத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்தபோது காகம் ஒன்று பீட்டின் அருகே வந்து அமர்ந்துள்ளது. இதைக் கவனித்த பீட் அந்த காகத்திற்கு விளையாட்டாகத் தான் பிடித்துக்கொண்டிருந்த சிகரெட்டை கொடுத்திருக்கிறார்.

 

உடனே அந்தக் காகமும் அந்த சிகரெட்டை வாங்கி, மனிதர்களைப் போலவே புகைத்துள்ளது. இதைப் பார்த்து ஆச்சர்யமடைந்த பீட், அந்தக் காகத்தை தனது நண்பனாக பாவித்துக் கொண்டார். எப்போதெல்லாம் பீட் அந்த தோட்டத்துக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் சரியாக அந்த காகமும் அங்கு வந்து உட்கார்வது வழக்கமாகி விட்டது.

 


நாட்கள் செல்லச் செல்ல இருவரும் ஒருவருக்கொருவர் சிகரெட்டை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டனர். இந்த நட்பு கொஞ்சம் ஓவராகவே வளர்ந்து பீட்டின் வாயில் இருக்கும் சிகரெட்டை எடுத்து புகைக்கும் அளவுக்கு காகத்துக்கு அவருடன் அன்னியோன்யம் உருவாகி விட்டது.

தனது நண்பனான காகத்திற்கு கிரேக் என பெயர் வைத்து அது வரும் போதெல்லாம் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் பீட். நாட்கள் நகர நகர கிரேக் – பீட் இடையேயான நட்பும் அதிகரித்துக் கொண்டே போனது. பொதுவாக புகைப்பழக்கம் உள்ள நண்பர்கள் ஒன்று சேரும் பொழுது சிகரெட் புகைத்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது வழக்கம். கிரேக்கும் அதுபோலவே பீட்டுடன் நட்போடு சிகரெட்டையும் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தது.

 


சில மாதங்கள் சென்றதும் தனது பிள்ளைகளையும் அந்த காகத்திற்கு அறிமுகப்படுத்திய பீட், அக்குழந்தைகளை காகத்திற்கு உணவளிக்கவும் வைத்திருக்கிறார். இதனால் பீட் குடும்பத்தாருக்கே குடும்ப நண்பர் ஆனது கிரேக். ஆனால் குழந்தைகள் தரும் உணவுகளைவிட கிரேக்கிற்கு பிடித்தது என்னவோ சிகரெட் தானாம்.

 

இந்த சூழலில் கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கிரேக் வரவே இல்லை. இதனால் பயந்து போன பீட், புகை பழக்கத்தின் காரணமாக கிரேக் மரணமடைந்து இருக்குமோ என அச்சம் கொள்கிறார். எனவே, கிரேக் நினைவாக அதனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் பீட்.

 


கிரேக்குடன் புகைப் பிடிப்பது போன்று சுமார் 6 ஆயிரம் புகைப்படங்கள் பீட்டிடன் இருக்கிறதாம். இந்த புகைப்படங்களை அவர் என் எப் டி (NFT) தொழிற்நுட்பத்தின் கீழ் பத்திரப்படுத்தியுள்ளார். அதில் ஒரு சில புகைப்படங்களைத் தான் தற்போது பீட் பகிர்ந்து வருகிறார். காகத்திற்கு புகைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என பீட்டிற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்த போதும், கிரேக்கின் இந்தப் புகைப்பிடிக்கும் புகைப்படங்கள் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us