இலங்கையின் புகழ்பெற்ற ஆலயத்திற்கு சென்ற தென்னிந்திய பிரபலம்!

இந்த செய்தியை பகிருங்கள்

தென்னிந்தியாவின் பிரபலமான நடன இயக்குனர் கலா மாஸ்டர் திருகோணமலைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேச்சரம் சிவன் கோயிலுக்கு கலா மாஸ்டர் இன்றைய தினம் (04-03-2022) விஜயம் மேற்கொண்டு புகைப்படங்களை எடுத்துள்ள்ளார்.

அந்த புகைப்படங்களை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது மட்டுமின்றி திருக்கோணேச்சரம் கோயிலை பார்த்து பிரிமித்து போனேன் எனவும், இது எனக்கு கிடைத்த வரம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது அழகான இடம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு 6 நாட்கள் தங்கி பல இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் முதலில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கலா மாஸ்டர் தற்போது திருகோணமலைக்கும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us