தனது FBI அதிகாரிக்கே ஒன்றும் தெரியாது என்று கூறிய ரம்.. மொக்கையா இருக்கே ?

தனது FBI அதிகாரிக்கே ஒன்றும் தெரியாது என்று கூறிய ரம்.. மொக்கையா இருக்கே ?

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான், அமெரிக்காவின் அதி நவீன B2 ரக ஸ்டெலத் விமானங்கள் ஈரான் நிலைகள் மீது பறந்து பங்கர் பேஸ்டர் குண்டுகளை போட்டது. அமெரிக்கா தாக்கியதாக கூறப்படும், 3 ஈரான் நிலைகளில் இருந்து எந்த ஒரு அணுக் கசிவும் ஏற்படவில்லை என்று சர்வதேச அணு மின் சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

மலைகளை மிக மிக ஆழமாக குடைந்து, அதனுள் அணு நிலையங்களை வைத்திருக்கிறது ஈரான். இதனால் அமெரிக்க குண்டுகள் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. இதனை FBI தலைமை அதிகாரி, தெளிவு படுத்தி இருந்தார். “எமது குண்டுகள் ஈரான் நிலைகளை முற்றாக அழிக்கவில்லை” என்று அவர் சொன்ன கருத்தை.

ரம் திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு. FBI தலைமை அதிகாரிக்கு எதுவும் தெரியாது என்று மீடியாக்கள் முன்னால் பேசியுள்ளார். இதனால் அவர் தனது சொந்த நாட்டு, மற்றும் உலகிலேயே மிகவும் பலமான ஒரு உளவு அமைப்பின் தலைவரை கொச்சைப்படுத்தி உள்ளார். அந்த அளவு அவருக்கு ஈகோ தலைக்கேறியுள்ளது.