“பிளாக் மெயில்!” மெயின் மேட்டரை கையில் எடுக்கும் புதின்? ஐரோப்பிய நாடுகள் கதறல்.. என்னாச்சு

இந்த செய்தியை பகிருங்கள்

மாஸ்கோ: உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், அதைச் சமாளிக்க ரஷ்யா பல நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.

 

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. இந்தப் போர் தொடங்கியது முதலே உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

அமெரிக்கா, தொடங்கி ஆஸ்திரேலியா வரை உலகின் பெரும்பாலான நாடுகள் இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன.

போர் இன்னும் முடியாத சூழலில் வரும் காலங்களில் இந்த பொருளாதாரத் தடை மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ரஷ்யாவின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள எரிசக்தி நிறுவனம் போலந்து மற்றும் பல்கேரியா நாடுகளுக்கு எரிவாயு சப்ளேவை நிறுத்தி உள்ளது. இதை வைத்துக் கொண்டு தங்களிடம் பிளாக் மெயில் செய்வதாக ரஷ்யா குற்றஞ்சாட்டி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த தலைவர்களும் கூட இதே குற்றச்சாட்டுகளைத் தான் முன் வைத்துள்ளனர்.

சமீபத்தில் இனி ரஷ்யாவுக்கு எதிரான நாடுகள் ரூபிள் மூலமே எரிவாயுவுக்கான தொகையைச் செலுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். இருப்பினும், இதற்கு ஒப்புக்கொள்ள போலந்து மற்றும் பல்கேரியா மறுத்துவிட்டன. இதன் காரணமாக அந்த இரு நாடுகளுக்கும் எரிவாயு சப்ளேவை அளிக்க ரஷ்யா மறுத்துவிட்டது. எரிபொருளுக்கான பணத்தைப் பெறவில்லை என்பதாலேயே சப்ளேவை நிறுத்தியதாக ரஷ்ய நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுபோன்ற அறிவிப்புகள் எரிவாயு சப்ளேவை எப்படி ரஷ்யா பிளாக்மெயில் செய்யப் பயன்படுத்துகிறது என்பதையே காட்டும் வகையில் உள்ளதாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கேஸ் சப்ளேவை புதின் இப்படி தடாலடியாக நிறுத்த மாட்டார். ஏனென்றால் தினசரி 400 மில்லியன் டாலரை ஐரோப்பிய ஒன்றியம் கேஸுக்காக ரஷ்யாவுக்கு அளிக்கிறது. போர் சூழலில் இத்தகைய பெரும் வருமானத்தை இழக்க புதின் விரும்ப மாட்டார்.

இதுபோன்ற அறிவிப்புகள் எரிவாயு சப்ளேவை எப்படி ரஷ்யா பிளாக்மெயில் செய்யப் பயன்படுத்துகிறது என்பதையே காட்டும் வகையில் உள்ளதாக ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கேஸ் சப்ளேவை புதின் இப்படி தடாலடியாக நிறுத்த மாட்டார். ஏனென்றால் தினசரி 400 மில்லியன் டாலரை ஐரோப்பிய ஒன்றியம் கேஸுக்காக ரஷ்யாவுக்கு அளிக்கிறது. போர் சூழலில் இத்தகைய பெரும் வருமானத்தை இழக்க புதின் விரும்ப மாட்டார்.

இது தொடர்பாக போலந்து பிரதமர் மடேஸ்ஸ் மொராவில்க்கி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறுகையில், “ரஷ்யா பழிவாங்கும் நடவடிக்கையாகவே இப்போது எரிபொருள் சப்ளேவை நிறுத்தி உள்ளது. இது போலந்து நாட்டின் தாக்குதல் தானே தவிர வேறு எதுவும் இல்லை. ரஷ்யாவின் எரிவாயு ஏகாதிபத்தியத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணம். ரஷ்யாவின் கேஸ் பிளாக்மெயிலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். கேஸ் சப்ளே தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கிரீஸ் நாடும் அதன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சேமிப்பு திறனை அதிகரித்து வருகிறது. தற்காலிக நடவடிக்கையாகப் பல அங்குள்ள பல தொழில் துறைகளும் இயற்கை எரிவாயுவிலிருந்து டீசலுக்கு மாறி வருகின்றன. இப்போதைய சூழலை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தினால், அது ரஷ்யாவுக்குப் பெரியளவில் பாதிக்காது. ஏனென்றால், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தயாராகவே உள்ளன.

பிற ஐரோப்பிய நாடுகளும் கூட ரஷ்யா மீதான தங்கள் சார்பைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தே வருகிறது. இருப்பினும், ரஷ்யாவைச் சார்ந்து இருக்காத சூழலை அடைய அதிக காலம் பிடிக்கும் என்பதே வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us