Croydon stabbings: குப்பை மலிவாகிப்போன கத்திக் குத்து: Argos புகுந்த நபர் அராஜகத்தை பாருங்கள்

பிரித்தானியாவில் கத்திக் குத்து நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இதேவேளை குரைடன்  (CROYDON) நகரை எடுத்துக் கொண்டால் சொல்லவே தேவை இல்லை. அந்த அளவு பிரசித்தி பெற்ற நகரம். கத்தி குத்து நடக்காமல் இருந்தால் தான் அது ஆச்சரியமான விடையம் என்று சொல்ல வேண்டும். 24ம் திகதி குரைடனில் உள்ள செயின்ஸ்பெரிக்கு உள்ளே, இருந்த ஆர்-கோஸ்சில் , புகுந்த நபர் ஒருவர் அங்கே இருந்த 5 பேர் மீது கத்தியால் குத்தியுள்ளார்.

காயப்பட்ட நபருக்கு உதவி செய்ய வந்த, ஆர்-கோஸ் வேலையாளையும் தாக்கியுள்ளார். இதனால் அருகில் இருந்த தீ அணைக்கும் சிலிண்டரை எடுத்த ஆர்-கோஸ் வேலையாள் அவர் தலையில் பொட் என்று அடிக்க அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். பின்னர் எழுந்து அந்தக் கத்தியைக் காட்டி மிரட்டியபடி வெளியே சென்றுவிட்டார்.

பொலிசார் வந்து, பார்த்தவேளை தான் ஒரு விடையம் புரிந்தது. கத்தியால் குத்து வாங்கிய 5 பேரும் ஒருவரை ஒருவர் முன்னரே அறிந்தவர்கள். அதே பொல இந்த 5 பேருக்கும் கத்தியால் குத்திய நபரை நன்றாகத் தெரியும். அப்படி என்றால் இது ஏதோ உள்வீட்டு விவகாரம் என்பதனை பொலிசார் முதலில் புரிந்துகொண்டார்கள். 

1 மணி நேரத்தில் ஒரு வழியாக தேடி கத்தியால் குத்திய நபரை கைது செய்து விட்டார்கள். ஆனால் பாவம் இந்த உள்வீட்டுச் சண்டையில் தலையிட்டு ஆர்-கோசில் வேலை செய்யும் இளைஞர் விரலில் காயத்துடன் உள்ளார்.