அஜித் பிறந்த நாள் அன்று அன்று ரசிகர்களுக்கு டபுள் டிரீட்.. ரெண்டுமே கொல மாஸ் அப்டேட் !! அதிரும் திரையுலகம் !!

இந்த செய்தியை பகிருங்கள்

அஜித் சில வாரங்களுக்கு முன்பு ‘ஏகே 61’ படத்திற்கான வேலையைத் தொடங்கினார், மேலும் இந்த படம் இயக்குனர் எச் வினோத்துடன் நடிகரின் மூன்றாவது தொடர்ச்சியான படத்தைக் குறிக்கிறது. திருட்டு த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட நகரத்தில் அமைக்கப்பட்ட வங்கி செட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது, ​​அஜீத் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், படத்தின் தலைப்பு நடிகர் பிறந்தநாளில் வெளியிடப்படும் என்றும் சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. சுவாரஸ்யமாக, இப்படத்தில் அஜித் வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது நடிப்புக்கு மட்டுமல்லாது இவரது நற்குணங்களுக்காகவும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். போனி கபூர் தயாரிப்பில் வினோத் தயாரிபில் அஜித் நடித்து வெளியான வலிமை கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் மக்களின் கொண்டாட்டத்தை அது தடுக்கவில்லை.

3 வருட காத்திருப்பிற்கு பின் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து அஜித் நடிப்பில் ஏகே 61 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தையும் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே நடிகர் அஜித் நடிப்பில் உருவாக உள்ள AK62 படம் குறித்த அப்டேட்டும் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. அதன்படி அப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயின் ஆக நடிப்பார் என தகவல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டுவந்தது.

இந்நிலையில், நடிகர் அஜித்தின் பிறந்தநாள் வருகிற மே 1ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்று அஜித் நடிக்கும் படங்கள் குறித்த 2 அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் தலைப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரு வேடத்தில் நடிப்பதாகவும் 2 ஹீரோயின்கள் எனவும் சொல்லப்படுகிறது.

அடுத்ததாக AK63 படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படத்தை ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித் தனது 51வது பிறந்தநாளை வரும் மே 1ம் தேதி கொண்டாட உள்ளதால், அந்த நாளை சிறப்பாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். மேலும், ‘அஜித் 61’ படத்தின் தலைப்பு மே 1 ஆம் தேதி தயாரிப்பாளர்களிடமிருந்து ஆச்சரியமான புதுப்பிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதை தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாக கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us