அப்பா நடத்தி வரும் பெரிய கம்பெனி ஒன்றின், அனைத்துச் சொத்துகளுக்கும் ஒரே உரிமையாளராக இருக்கும் டிலன் தொமஸ் என்னும் இளைஞர், தனது உற்ற நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். டிலன் தொமஸ் சுமார் 230 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்கு ஒரே வாரிசு ஆவார். அவர் தனது மாளிகை வீட்டில் வசித்து வந்த வேளை. அங்கே வேலைக்கு சேர்ந்து பின்னர் டிலன் தொமசின் உற்ற நண்பராக மாறியவர், தான் வில்லியம் புஷ். இவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருந்து வந்தது.
ஒரு வேலை ஆள் என்று கூட பாராமல், டிலன் தனது காரில் ஏற்றி வில்லியத்தை பல இடங்களுக்கு கூட்டிச் செல்வது வழக்கம். வில்லியத்திற்கு என்ன தேவை என்றாலும் டிலன் வாங்கிக் கொடுப்பார். ஒரு தாயைப் போல கவனித்து வந்துள்ளார். ஆனால் 2023ம் ஆண்டு கிருஸ்மஸ் தினத்தில், வில்லியம் புஷ் வந்து தனக்கு ஒரு காதலி இருப்பதாகவும், அந்தப் பெண்ணுடன் தான் சென்று தனியாக ஒரு வீட்டை எடுத்து குடியெறப் போவதாகவும் கூறியுள்ளார்.
இதனை டிலனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்படி நீ செய்தால் உன்னைக் கொன்று விடுவேன். என்னை விட்டு பிரிந்து போகாதே என்று டிலன் கெஞ்சியுள்ளார். இருந்தாலும் வில்லியம் புஷ் கேட்டபாடாக இல்லை. ஆனால் வில்லியம் புஷ் சற்று பயத்தில் இருந்துள்ளார். இரவில் தூங்கும் வேளையில் கூட, தனது அறை கதவை பூட்டி விட்டு தான் தூங்குவது வழக்கம். இந்த நிலையில் ஒரு நாள் கத்தி ஒன்றை எடுத்து வந்த டிலன், பின் புறமாக இருந்து, வில்லியம் புஷ்ஷின் கழுத்தில் குத்தியுள்ளார். உயிரைக் காபாற்ற வில்லியம் கீழ் அறைக்கு ஓடியுள்ளார்.
திரத்திச் சென்ற டிலன், அவர் கழுத்தில் 16 தடவையும் உடலில் 11 தடவையும் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் ரத்தம் ஆறாக ஓடியது. வில்லியம் துடி துடித்து இறந்து போனார். ஆனால் கடைசி வரை டிலன் தொமஸ், நீதிமன்றில் குற்றத்தை ஓப்புக்கொள்ளவே இல்லை. தன்னை வில்லியமே குத்த வந்ததாகவும். தான் தற்பாதுகாப்புக்காக கத்தியை பறித்து அவரை குத்தியதாகவுமே டிலன் கூறிவந்துள்ளார். ஆனால் டிலன் வில்லியத்தை கத்தியால் குத்த முன்னர், தனது அறையில் உள்ள கம்பியூட்டரில், கழுத்தில் குத்தினால் என்ன நடக்கும் என்று Google தேடிப் பார்த்துள்ளார். இதனை வைத்தே நீதிமன்றம் டிலன் தான் குற்றவாளி என அறிவித்து, ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. குறைந்த பட்சம் அவர் 19 வருடம் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார். ஒரு நட்பு செய்த வேலையை பார்த்தீர்களா ?
ஆனால் டிலன் மிகவும் தனிமையில் இருந்த ஒரு இளைஞர் என்றும். வில்லியமே அவரது உற்ற நண்பர் என்றும் கூறப்படுகிறது. டிலன் வில்லியத்தையே மிகவும் நம்பி இருந்ததாகவும். வில்லியம் பிரிந்து செல்வதை டிலனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அவரது குடும்பத்தார் கூறியுள்ளார்கள். இவர்கள் இருவரும் எந்த வகையிலும் ஓரினச் சேர்கையாளர்கள்(GAY) அல்ல. நட்பு…. நட்பு,,,, நட்பு… மட்டும் தான்.