இது என்ன ஆச்சரியம்….!! போர்க் கப்பல்களை பாதுகாக்கும் டால்பின்கள்…. ரஷ்யாவின் அதிரடி நடவடிக்கை….!!

இந்த செய்தியை பகிருங்கள்

ரஷ்ய நாட்டில் நீருக்கடியில் நடக்கும் தாக்குதலில் இருந்து தனது கடற்படையை பாதுகாக்க கருங்கடலில் செயல்பட்டு வரும் தனது கடற்படை தளத்தில் பயிற்சி பெற்ற டால்பின்களை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக தி கார்டியன் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ராணுவ நோக்கங்களுக்காக டால்பின்களுக்கு நன்கு பயிற்சி அளித்து வருகிறது ரஷ்யா. இந்த டால்பின்கள் பொருட்களை மீட்டெடுக்க மற்றும் எதிரிகளின் கவனத்தை திசை திருப்ப பயன்படுத்தப்படுகின்றன.

இதனை அடுத்து யுஎஸ் நேவல் இன்ஸ்டிட்யூட் (யுஎஸ்என்ஐ) — கிரிமியாவில் உள்ள செவாஸ்டோபோல் துறைமுகத்தில் கடற்படைத் தளத்தின் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ய உதவுகின்றது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தபோது இரண்டு டால்பின்கள் அந்த துறைமுக தளத்திற்கு மாற்றப்பட்டது. இந்த செவஸ்டோபோல் ரஷ்ய கடற்படையின் முக்கியமான கடற்படை தளமாகும். இது 2014 இல் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டு கிரிமியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ளது. அதாவது ரஷ்ய வல்லுநர்கள் புதிய சாதனங்களை உருவாக்கி டால்பின்கள் நீருக்கடியில் கண்டறிதல் இலக்குகளை ஆபரேட்டரின் மூலமாக மானிட்டருக்கு சமிக்ஞையாக மாற்றுகிறது என்று ரஷ்யா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுபோல் அமெரிக்காவிடம் ராணுவ உதவிக்கு டால்பின்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். அமெரிக்கா தனது சொந்த டால்பின்கள் மற்றும் கடல் சிங்கங்களை பராமரித்து பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த டால்பின்களுக்கு குறைந்தபட்சமாக $28 மில்லியன் செலவிட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா ​​நாட்டில் 70 டால்பின்கள் மற்றும் 30 கடல் சிங்கங்கள் சான் டியாகோவில் உள்ள கடற்படை தளத்தில் நீர்நிலைகளில் பயிற்சி பெற்று வருகின்றன.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us