36 வயதான மார்க் கார்டன் மற்றும் அவரது 6 வயது மகள் ஹோப், ஸ்காட்லாந்தின் வெஸ்ட் கால்டர் பகுதியில் உள்ள வீட்டில் திங்கள்கிழமை மரணமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். காவல்துறை, சம்பவ இடத்துக்கு விரைந்தது சென்று விசாரணைகளை நடத்தியது . இவ்விருவரின் மரணம் தற்போது “மர்மமானது” என்று கருதப்படுகிறது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
மூன்றாம் தரப்பு தொடர்புடைய எந்த அறிகுறிகளும் கண்டறியப்படவில்லை, மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மரண பரிசோதனைகள் விரைவில் நடத்தப்படும். இந்த சம்பவம் குறித்து பேசிய தலைமை ஆய்வாளர் எலேன் மெக், இது “உள்ளூர்வாசிகளுக்கு மிகவும் பாதிக்கக்கூடியதும் கவலையளிக்கக்கூடியதுமான” விடையம் என்று தெரிவித்தார்.
அந்தப் பகுதி மக்கள் மார்க் மற்றும் ஹோப்பை தனிமையாக இருப்பவர்களாக வர்ணித்தனர். ஒருவரோ, ஹோப்பை ஒரு “அழகான சிறுமி” என்று நினைவுகூர்ந்தார். இந்த சோகமான சம்பவத்தின் முழு தகவல்களையும் கண்டறிய போலீஸ் ஸ்கொட்லாந்தின் முக்கிய விசாரணை குழு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எவரும் வீட்டினுள் வந்து சென்ற தடையம் இல்லை. எந்த காயமும் இல்லை. ஆனால் இயற்கையாக இறந்தது போல இருவர் உடலும் உள்ளது என்பது, பெரும் மர்மமான விடையமாக உள்ளது.