இத பண்ணாதீங்க…. மோசமான விளைவை சந்திப்பிங்க…. எச்சரிக்கை விடுத்த ரஷ்யா….!!!

இந்த செய்தியை பகிருங்கள்

உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா இறங்கி வரவேண்டும். இதனால் பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருக்கும் அழுத்தங்களும் ரஷ்யாவை இறங்கி வரச் செய்துள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தைக்காக இருநாட்டு குழுவினரும் பெலாரஸ் வருகை தந்துள்ளனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க நோட்டா அமைப்பு முடிவு செய்துள்ளது.

இதனால் யூனியன் வெளியுறவு கொள்கை தலைவர் ஜோஷப் போர்ரெல் கூறுகையில் “கீவ் நகரில் உள்ள ரஷ்ய படையினருக்கு எதிராக போராடும் வீரர்களுக்கு ஐரோப்பிய யூனியன் போர் விமானங்கள் வழங்கும்” என்றுள்ளார். இதனால் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் நோட்டாவின் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா நோட்டா அமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஐரோப்பிய யூனியன் ரஷ்யாவுக்கு விரோதமான வகையில் செயல்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us