வாடகைக்கு போன இடத்தில் தகாத உறவு.. கள்ளக் காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. கணவனை தீர்த்து கட்டிய மனைவி.

இந்த செய்தியை பகிருங்கள்

மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த கணவன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஆந்திர மாநிலம் விஜயநகரல் நடந்துள்ளது. திருமணத்திற்கு புறம்பான உறவு  கொலை தற்கொலையில் முடிவது என்பது வரையறுக்கப்படாத நியதியாக நியதியாக நடந்து வருகிறது.

மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த கணவன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது ஆந்திர மாநிலம் விஜயநகரல் நடந்துள்ளது. திருமணத்திற்கு புறம்பான உறவு  கொலை தற்கொலையில் முடிவது என்பது வரையறுக்கப்படாத நியதியாக நியதியாக நடந்து வருகிறது. கணவனை மீறி வெளி ஆட்களுடன் உறவு கொள்ளும் பெண்கள் அதற்காக ஒருகட்டத்தில் தன் கணவனையே தீர்த்துக் கட்டும் அளவிற்கு துணிவதுதான் கொடூரத்தின் கொடூரம்.  இதுபோன்ற சம்பவங்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நடப்பது அல்ல, இன்று பரவலாகவே நடந்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. கள்ளக் காதலுடன் சேர்ந்து கணவனை அந்த பெண் கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்தான் அது. ஆனால் சந்தேகமடைந்த கணவனின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தச் சம்பவம் போலீசாரையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- ஆந்திர மாநிலம் விஜய நகரம் மாவட்டம் மாய ரகமிடம் மண்டலம் கடிவானி வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் அட்டாடா  சந்திரசேகர் (38) இவர் தனியார் மருத்துவமனையில் கிளார்க்காக பணிபுரிந்து வருகிறார். உங்களை அலுவலகத்துக்கு அருகிலேயே குடிபெயர திட்டமிட்ட அவர், சில வருடங்களுக்கு முன்னர் அங்குள்ள யாதவர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார். அப்போது வீட்டின் உரிமையாளரான  கிளான சூரியின் இரண்டாவது மகன் கிளான ராம் பாபுவுக்கும் சந்திரசேகரின் மனைவி அருணா ஜோதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் திருமணத்துக்கு புறம்பான உறவாக மாறியது. இந்நிலையில் கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் ராம் பாபுவும் அருணா ஜோதியும் அடிக்கடி சந்தித்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஒரு கட்டத்தில் இந்த விஷயம் கணவனுக்கு தெரிந்து பயங்கர அதிர்ச்சி அடைந்தார், இந்த தொடர்பை விட்டுவிடுமாறு மனைவிக்கு அறிவுறுத்தினார். அதே நேரத்தில் அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு பகுதிக்கு குடியேறினார். ஆனால் அருணா ஜோதி வீடு மாறிய பிறகும் ராம்பாபு உடனான தகாத உறவை அவர் கைவிடவில்லை.  அங்கேயும் அவர்கள் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதை அறிந்த கணவர் சந்திரசேகர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். செய்வது தவறு என மனைவிக்கே புரிய வைக்க முயற்சித்தார். குழந்தைகள் வளர்ந்து வருகிறார்கள் இந்த விஷயம் அவர்களுக்கு தெரிந்தால் நன்றாக இருக்காது என மனைவியிடம் மன்றாடினார், ஆனாலும் அருணா ஜோதி கள்ளக்காதலை கைவிட மறுத்துவிட்டார். மாறாக தனது கள்ளக்காதலுக்கு தொடர்ந்து இடையூறு செய்து வரும் கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். அதனால் கள்ளக்காதலனுடன் வெளியேற திட்டமிட்ட அவர் கூலிப்படையினரை சந்தித்து கணவனை தீர்த்துக் கட்ட 40 ஆயிரம் ரூபாய் தருவதாக பேரம் பேசினார்.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் லாவேறு மண்டலம் வெங்கடாபுரத்தில் வசிக்கும் அருணா ஜோதியின் தாய் ஷம்பனா சத்தியவதி மருமகனை தீர்த்துக் கட்ட 20 ஆயிரம் ரூபாய் வழங்கினார். அவர்கள் திட்டமிட்டபடி சந்திரசேகரை கடந்த மாதம் 25 ஆம் தேதி ரயில் நிலையத்துக்கு வரவழைத்தனர். அங்கே மறைந்திருந்த கூலிப்படையினர் சந்திரசேகரின் பின்மண்டையில் தாக்கி கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் உடலை தண்டவாளத்தில் வீசினர், அது தற்கொலை என நாடகமாடினர். ஆனால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்திரசேகரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை பிடித்து விசாரித்ததில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டியது ஒப்புக்கொண்டார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார்,  கணவனையே தீர்த்துக்கட்டிய கள்ளக்காதலன் மற்றும்  மனைவி அருணா ஜோதி, கூலிப்படை மற்றும் அதற்கு உதவியாக இருந்த அருணா தேவியின் தாய் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us