டாக்டர் ஆகும் கடைசி ஆண்டில் மாணவன் பலி; எமனாக வந்த அரசு பேருந்து

இந்த செய்தியை பகிருங்கள்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே இரு சக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மருத்துவம் இறுதியாண்டு பயிலும் மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி சுப்ரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் இவரது மகன் சண்முகம். இவர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் இறுதியாண்டு பயின்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று கல்லூரியில் இருந்து மதுரை சென்றுவிட்டு மீண்டும் கல்லூரி நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். படமாத்தூர் அருகே வரும்போது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே மாணவன் சண்முகம் உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய பூவந்தி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us