நேற்றைய தினம்(20) நடைபெற்ற டொனால் ரம், பதவியேற்பு விழாவில் மிக முக்கிய விருந்தினராக எலான் மஸ்க் கலந்துகொண்டார். அது மட்டும் அல்ல அவர் உரையாற்றவும் அவருக்கு அரசு அனுமதி கொடுத்து இருந்தது. அவர் டொனால் ரம்பை புகழ்ந்து பேசி, இன்று முதல் அமெரிக்கா ஒரு புதிய நாடாக மாறும் என்று தெரிவித்து விட்டு. நாசி ஸ்டைலில் ஹிட்லர் அடிக்கும் சலீயூட்டை அடித்துள்ளார் எலான் மஸ்க்
டெஸ்லா உரிமையாளர் மற்றும் X எனப்படும் ரிவீட்டர் மீடியாக்களை நடத்திவரும் எலான் மஸ்க் சமீப காலமாக தனது உண்மையான முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார். கடும் இன வெறி கொண்ட நபராக எலான் மஸ்க் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இனவாதம் பேசி அரசியலுக்கு வந்து, இனவாதம் பேசி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நின்ற டொனால் ரம்புக்கு, உடனே உதவி செய்தார் எலான் மஸ்க்.
இன்று ஹிட்லர் பாணியில் சலீயூட் அடிக்கிறார். சர்ச்சை கிளம்பிய பின்னர் தான் அந்த நோக்கத்தில் இதனைச் செய்யவில்லை என்று கூறியுள்ள எலான் மஸ்க், அப்படியே கதையை திருப்பில் போட்டு விட்டார். வெறும் சலீயூட் அடித்ததாகவும். சிலர் அதனை குறைசொல்வதாகவும் அவர் சற்று முன்னர் குறிப்பிட்டுள்ளார். X எனப்படும் பெரும் மீடியாவை கையில் வைத்துக் கொண்டு, பல நாடுகளில் அவர் உள்நாட்டு அரசியலில் தலையிட்டு வருகிறார்.
தற்போது குதிரைக்கு கொம்பும், சிறகும் கிடைத்தது போல ரம் வேறு ஆட்சிக்கு வந்திருப்பதால். அவருக்கு மேலும் பவர் அளவுக்கு அதிகமாக கிடைத்துள்ளது. இனி என்ன ஆட்டம் எல்லாம் ஆடப் போகிறார் என்பது தெரியவில்லை.
Source : DM -UK