லண்டனில் நேற்றைய தினம்(20) இலக்கம் 10 டவுனிங் வீதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமர் கலந்துகொண்டார். அவர் பல ஈழத் தமிழ் ஆர்வலர்களையும், செயல்பாட்டாளர்களையும் சந்தித்தார். தை மாதம் இடம்பெறும் தைப் பொங்கல் தினத்தை, ஈழத் தமிழர்கள் Tamil heritage month என்று அழைக்கிறார்கள். இதனூடாக பல்லின மக்களுக்கு தமிழர்களின் தொன்மையை புரியவைத்தும் வருகிறார்கள்.
அந்த வகையில் தைப் பொங்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள, பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமர், நடன நிகழ்ச்சியை கண்டு கழித்தார். அத்தோடு தமிழ் உணவுகளும் அங்கே பரிமாறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய கியர் ஸ்டாமர் , பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்கள், இந்த நாட்டுக்கு பல வழிகளில் பங்களிப்புச் செய்து வருகிறார்கள் என்று புகழ்ந்து பேசினார். தமிழர்களது கடின உழைப்பு. தமிழர்களின் பண்பாடு, நாட்டை விட்டு வேறு இடத்தில் குடியேறினாலும், தமது அடையாளத்தை தொலைக்காமல் வாழ்கிறார்கள் என்றும் பேசியிருந்தார்.
இது ஈழத் தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய விடையம். சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர், இலக்கம் 10 டவுனிங் வீதியில் தீபாவளி கொண்டாட்டம் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டபோது தான், ஏன் எமது தைப் பொங்கலையும் இப்படிக் கொண்டாட முடியாது ? என்று எண்ணி. நாம் இதனை பாராளுமன்றில் அல்லது டவுனிங் வீதியில் கொண்டாட வேண்டும் என்று பிரித்தானிய அமைப்புகளிடம் அதிர்வு இணையம் கோரிக்கை விடுத்தது. அதனைத் தொடர்ந்தே பல அமைப்புகள், இதனை செய்ய ஆரம்பித்தது என்பதனை நாம் பெருமையாக கூறிக்கொள்ள விரும்புகிறோம்.
இந்த தைப் பொங்கல் நிகழ்வு இன்று இவ்வள்வு சிறப்பாக நடக்க, லேபர் கட்சிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் திரு.சென் கந்தையா அவர்கள், கணா சொலிசிட்டர், மற்றும் கான்சர்வேட்டிவ் கட்சிக்கான தமிழர் அமைப்பின் தலைவர் அர்சுணா ஆகியோரே காரணம் என்பதனை எவராலும் மறுக்க முடியாது.