இவருக்கும் பாப்பாரப்பட்டி அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்த சதீஷ் குமார் மனைவி சங்கீதா(19 ) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் வீட்டில் யாருக்கும் தெரியாமல் ‘ நெருக்கமாக’ பழகி வந்தனர். இந்த நிலையில் கடந்த 30- ந்தேதி, சின்ன பையன், தனது கள்ளக்காதலி சங்கீதாவை அழைத்து கொண்டு மாயமானார்.
இதனால் மனைவி மாயமானதால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஊரை விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே இன்று காலை சின்ன பையன், கள்ளக்காதலி சங்கீதா இருவரும் பென்னாகரம் போலீசில் இன்று காலை சரண் அடைவதற்காக சென்றனர்.
அப்போது போலீஸ் நிலையத்தில் நுழையும் போது சின்னப்பையன் மற்றும் சங்கீதா இருவரும் வாந்தி எடுத்து மயங்கி விழும் நிலையில் இருந்துள்ளனர்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். இதில் இருவரும் விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் இருவரையும் மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்பு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.ஆனால் செல்லும் வழியிலேயே சின்னபையன், சங்கீதா இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியுடன் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பென்னாகரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.