Sri Lanka & China currency swap: மேலும் 1.4 பில்லியன் டாலர் சீனாவிடம் கடன் ! இலங்கை எங்கே செல்கிறது ?

இலங்கையும் சீனாவும் currency swap எனப்படும் வணிக முறை முலம், 1.4 பில்லியன் டாலருக்கு ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.  

இதன் அடிப்படையில், சீனாவிடம் இருந்து இனி வரும் காலங்களில், இலங்கை 1.4பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்ய முடியும். ஆனால் அதற்கு நிகரான தெயிலை, அரிசி, அல்லது ரத்தினனக் கல் என்று எதனையாவது இலங்கை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இல்லையென்றால் அது கடனாக மாறிவிடும்.

இலங்கையில் எது தான் இல்லை ? எல்லாம் இருக்கிறது. ஆனால் அதனை இலங்கை உற்பத்திசெய்யவில்லை. அதனால் தான் இன்று இலங்கை பாங் ரப் அடித்த ஒரு நாடாக இருக்கிறது. எப்படி இவர்கள் 1.4 பில்லியன் டாலருக்கு, அதுவும் சீனாவுக்கு எதனை ஏற்று மதி செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. அப்படி செய்யாத பட்சத்தில், இந்தப் பணம் ஒரு கடனாம மாறி இலங்கையில் கழுத்தை இறுக்கும். 

யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, கடன் வாங்குதவை நிறுத்தவே மாட்டேன் என்கிறார்கள். இதற்கு வட்டி கட்டியே இலங்கை நலிந்து போகும் என்பது ஏன் இவர்களுக்கு புரியவில்லை. அனுரா அரசு பொறுப்பு ஏற்ற பின்னர். அவர்கள் தாமாகவே 5000 ரூபா நோட்டுகளை அச்சடித்துள்ளார்கள். இருப்பினும் ஒரு வகையாக பண வீக்கத்தை அனுரா அரசு சற்று சமாளித்துள்ளது என்று தான் கூறவேண்டும். ஆனால் இலங்கை கடன் பெறுவதை முதலில் நிறுத்தி, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவேண்டும்.