Posted in

ஜன நாயகனின் ஆட்டம் முடியுதா? உச்சத்தில் எடுத்த திடீர் முடிவு: குழப்பத்தில் ரசிகர்கள் !

“இந்த வருசத்தோட எல்லாமே முடியுது.. நன்றி சொல்றதா இல்லை மிஸ் யூ சொல்றதானே தெரியல” – கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களின் தற்போதைய மனநிலை இதுதான்!

தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக வந்து, இன்று தளபதி விஜய்யாக அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கும் மக்கள் நாயகன், திரையுலகில் தனது பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிவெடுத்துள்ளார். சரியாக நேற்றுடன் (டிசம்பர் 4)  தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 33 வருடங்கள் நிறைவு செய்கிறார்!

உச்சத்தில் இருக்கும்போதே பிரியாவிடை!

  • வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருக்கும் அவரது ‘ஜன நாயகன்’ திரைப்படம் தான் திரையில் அவர் நடிக்கும் கடைசிப் படம்!

  • சினிமா உலகிலேயே உச்சத்தில் இருக்கும்போது, இந்தப் படத்திற்காக ரூபாய் 235 கோடிகள் சம்பளம் பெற்றார் என்ற தகவல் கசிந்துள்ளது!

  • ஆனால், இந்த உச்சத்தை விட்டு விலகி, முழு நேர அரசியலில் கவனம் செலுத்தப் போகிறேன் என்று அவர் எடுத்த முடிவால், ரசிகர்கள் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் இருக்கிறார்கள்.

உருவக் கேலியில் இருந்து உலக நாயகன் வரை!

  • ஆரம்ப காலத்தில், ‘நடிக்க வரவில்லை’ என்றார்கள்… உருவக் கேலி செய்தார்கள்! அதையெல்லாம் எதிர்த்து நின்று, இன்று விஜய் திரையில் அழுதால், தியேட்டரில் தேம்பி அழும் ரசிகர்களை உருவாக்கியிருக்கிறார்!

  • அவர் சிரித்தால் கொண்டாட்டம்… அவர் அழுதால் துக்கம்… அவரது அறிவுரையை வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம்!

  • தயாரிப்பாளர்களுக்கு அவர் படம் என்றால், நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நம்பிக்கையை கொடுத்தவர் தளபதி!

நன்றி சொல்வதா? மிஸ் யூ சொல்வதா?

33 ஆண்டுகள் ரசிகர்களை மகிழ்வித்த உழைப்புக்கு நன்றி சொல்வதா, இல்லை ‘ஜன நாயகன்’ படத்துக்குப் பிறகு அவரை திரையில் பார்க்க முடியாத ஏக்கத்தில் ‘மிஸ் யூ’ சொல்வதா என்று தெரியாமல், ரசிகர்கள் குழப்பத்தில் தவிக்கிறார்கள்!

‘நாளைய தீர்ப்பு’ மூலம் கால் பதித்து, இன்று தமிழ் சினிமாவின் ‘ஜன நாயகன்’ ஆக நிற்கும் விஜய்யின் திரைப் பயணம் மறக்க முடியாதது!