ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முன்னாள் வெளியுறவுக் கொள்கை தலைவர் ஃபெடெரிகா மொகெரினி (Federica Mogherini), அவர் தலைமை வகித்த ‘College of Europe‘ கல்வி நிறுவனத்தின் ரெக்டர் (Rector) பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்தத் திடீர் முடிவு, அவர் மீது சுமத்தப்பட்டுள்ள மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐரோப்பிய பொது வழக்கறிஞர் அலுவலகம் (EPPO) விசாரணை நடத்தி வரும் சூழலில் வந்துள்ளது.
பின்னணி என்ன?
- ஐரோப்பிய ஒன்றியத்தின் இளைய தூதர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘EU Diplomatic Academy‘ தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
- இந்த ஒப்பந்தத்தை College of Europe பெற்றதில், ரகசிய தகவல்கள் போட்டியிட்ட ஒரு நிறுவனத்துடன் பகிரப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
- மொகெரினி மீது ‘கொள்முதல் மோசடி, ஊழல், நலன் முரண்பாடு மற்றும் தொழில்முறை இரகசியங்களை மீறுதல்’ போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
- மொகெரினியுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரி ஸ்டெஃபானோ சன்னினோ (Stefano Sannino) உட்பட மேலும் இருவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ராஜிநாமா அறிவிப்பு:
- இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடங்கிய நிலையில், “நான் எப்போதும் என் கடமைகளைச் செய்த நேர்மை மற்றும் கண்டிப்புக்கு ஏற்ப, இன்று College of Europe-ன் ரெக்டர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்,” என்று மொகெரினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- இவர், விசாரணையின் போது தான் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இருந்ததாகவும், குற்றச்சாட்டுகளில் இருந்து தான் விடுவிக்கப்படுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவராக (High Representative for Foreign Policy) 2014 முதல் 2019 வரை பணியாற்றிய மொகெரினி, 2020 ஆம் ஆண்டு College of Europe-ன் ரெக்டராகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.