புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் ஸ்டுடியோவின் உரிமையாளரும், மூத்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் (86) அவர்கள் வயது மூப்பின் காரணமாக நேற்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர், உருக்கமாகப் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது!
சினிமாவை நேசித்த ஜென்டில் மேன்!
-
ஏ.வி.எம் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகனான ஏ.வி.எம். சரவணன், இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவர்.
-
நேற்று அதிகாலை 5.30 மணியளவில் காலமான அவரது உடல், தற்போது ஏ.வி.எம் ஸ்டுடியோ வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் முதல் ரஜினி வரை அஞ்சலி!
-
அஞ்சலி செலுத்துவதற்காக முதலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வருகை தந்தார்.
-
அதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் ஏ.வி.எம். சரவணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
-
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், கண்ணீருடன் உருக்கமான வார்த்தைகளைப் பகிர்ந்தார்:
“எம். சரவணன் மிகப்பெரிய மனிதர். ஜென்டில் மேன் என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டு இவர்தான். இவரது உள்ளமும் வெள்ளைதான், சினிமாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.”
ரஜினிகாந்தின் இந்த உருக்கமானப் பேச்சு சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.