வேள்பாரி நாவலை 3 பாகமாக எடுக்கும் சங்கர் இனியுமாடா ? என்று நக்கல் அடிக்கும் நெட்டிசன்கள்

பொன்னியின் செல்வன் காவியத்தையே விஞ்சும் அளவுக்கு வரலாற்று காவியமான வேள்பாரி கதையை படமாக எடுக்க உள்ளதாக பிரபல இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியன்2 ரிலீஸ்க்கு பிறகு சங்கர் இயக்கத்தில் பொங்கல் ரிலீசாக கேம் சேஞ்சர் படம் வெளியாகியுள்ளது. ராம் சரண் நடிப்பில் சங்கர் இயக்கியுள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிசிலும், விமர்சன ரீதியாகவும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

 படம் வசூலில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரும் ஷங்கர் தனது அடுத்த படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, எம்பி சு.வெங்கடேசன் எழுதியுள்ள வெள்பாரி என்று பிரமாண்ட நாவலை படமாக எடுக்க உள்ளதாக சங்கர் கூறியுள்ளார். ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் 2 பாகங்களாக எடுத்தார். ஆனால் வேள்பாரியை 3 பாகங்களாக இயக்க உள்ளதாகவும், இதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்ததாகவும் சங்கர் கூறியுள்ளார்.

 வேள்பாரி போன்ற பிரமாண்ட நாவலை படமாக இயக்குவது சாத்தியமில்லாதது என்று கூறி வந்தாலும், அதை படமாக இயக்க சங்கர் முன்வந்துள்ளார். பிரமாண்ட இயக்குநரான சங்கர் வேள்பாரி நாவலை படமாக இயக்குவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர், நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.