எது எதுக்கேல்லாம் AI பாவிக்கிறார்கள் என்றே தெரியவில்லை. தற்போது இந்த AI- ஸ்பீட் கமராவிலும் பாவிக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனைப் பாவித்து சுமார் 2 மணி நேரத்தில் 850 பேருக்கு ஸ்பீட் டிக்கெட்டை கொடுத்துள்ளது இந்த கமரா.
Humberside பொலிசாரே இதனை முதன் முதலாக பாவிக்க ஆரம்பித்தார்கள். முதலில் இவை ஒரு வெள்ளை வேனில் பொருத்தப்பட்டு இருந்தது. பின்னர் தற்போது இதனை தேசிய நெடுஞ்சாலைகளில்(மோட்டர்வேயில்) நிலந்தரமாக பொருத்தி விட்டார்கள்.
எனவே கார் ஓட்டுபவர்கள் இனி கவனமாக இருப்பது நல்லது. வேகமாக ஓட்டி விட்டு கமராவை கண்ட உடனே வேகத்தை குறைத்தால், நாம் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்று நினைப்பது பெரும் தவறு.