ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் தொடரும்: அமெரிக்கா, கனடா உறுதி!

இந்த செய்தியை பகிருங்கள்

ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் தொடருமென அமெரிக்கா, கனடா நாட்டுத் தலைவர்கள் உறுதியான முடிவெடுத்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவை அடுத்து, உக்ரைன் நாட்டின் மீது, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ், கெர்சான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ரஷ்யப் படைகள் கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தின. உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் படையெடுப்பு காரணமாக அந்நாட்டில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கோரிக்கை விடுத்தனர். எனினும் இதற்கு விளாடிமிர் புடின் செவி சாய்க்கவில்லை. . போரை நிறுத்துவது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளும் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருந்தன. போர் இன்னும் நீடிப்பதால் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இரு நாடுகளும் கடைபிடிக்க வேண்டும் என்று இரு நாட்டு தலைவர்களும் உறுதி எடுத்துக் கொண்டனர்.

வரும் ஜூன் மாதத்தில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற உள்ள அமெரிக்க மாநாட்டில் இருவரும் பங்கேற்பது குறித்து விவாதித்தனர். அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளில் வசிக்கும் ரஷ்ய செல்வந்தர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்களுக்கு பல்வேறு தடைகளை இரு நாடுகளின் அரசும் விதித்துள்ளன. மேலும் இந்நாடுகளிலிருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்கள் கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தப்பட்டதன் காரணமாக ரஷ்யா அத்தியாவசிய தேவைகளுக்கு தற்போது இந்திய ஏற்றுமதியை நம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


இந்த செய்தியை பகிருங்கள்

Contact Us