அஜித் நடிக்கு விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விடா முயற்சி. இதில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ் என பலர் நடித்துள்ளர். படக்குழு வெளியிட்ட டிரெய்லரில் அஜித்தின் ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
குடும்ப வாழ்க்கையில் இருக்கும் அஜித், பிரச்சனையில் மாட்டிக் கொள்வதும், அதை தொடர்ந்து நடைபெறும் ஆக்ஷன் காட்சிகள் உள்ளன.
டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதிர்பார்ப்பை விடாமுயற்சி பூர்த்தி செய்யுமா என்ற அதிர்ச்சியில் உள்ளனர். ஒட்டு மொத்தத்தில் படத்தின் டிரெய்லரே சரியில்லை என்றால், படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் கவலை கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.