High casualty for Russia: ஒரே நாளில் 98 ரஷ்ய ராணுவம் சாவு மிகப்பெரிய தாக்குதல் என்கிறது உக்ரைன்

உக்ரைன் ராணுவத்தில் 47th Mechanized Brigade என்ற சிறப்பு படையணி ஒன்று உள்ளது. இது கடந்த 2022ம் ஆண்டு உருவாக்கப்பட்ட படையணி ஆகும். ஈழத்தில் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் “சாள்ஸ் அன்ரனி” படையணி களத்திற்கு வந்தால், சிங்கள ராணுவம் எப்படி தலை தெறிக்க ஓடுமோ. அது போல இந்த 47th Mechanized Brigade படையணி மிகவும் பலம்வாய்ந்த ஒன்றாகும். 

இந்தப் படையணியே Kursk நகரத்தை தக்கவைத்து வருகிறது. இந்த Kursk நகரம் அப்படி என்ன முக்கியமான நகரம் ? என நீங்கள் நினைக்கலாம். அது வேறு ஒன்றும் அல்ல, ரஷ்யாவில் உள்ள நகரம் தான் இந்த Kursk . இதனை தற்போது உக்ரைன் படைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இந்த நகரை மீட்க்க, ரஷ்யா அவ்வப்போது முயற்ச்சி செய்கிறது. ஆனால் ஒவ்வொரு தடவையும் பலத்த இழப்பில் தான் சென்று முடிகிறது.

அது போலவே கடந்த 9ம் திகதி ரஷ்ய ராணுவம் இந்த நகரை கைப்பற்ற என படை திரட்டி வந்தவேளை, உக்ரைன் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 98 ரஷ்ய ராணுவம் கொல்லப்பட்டதாகவும், மேலும் 50க்கும் அதிகமான ராணுவத்தினர் காயமடைந்து. அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் உக்ரைன் படை தற்போது அறிவித்துள்ளது. 

மிகப் பெரிய வல்லரசு நாடான ரஷ்யாவின் ஒரு நகரை, பிடித்து வைத்திருக்கிறது உக்ரைன். இதனை ரஷ்யாவால் இன்று வரை மீட்க்க முடியவில்லை. இந்த நகர் ஒன்றும் எல்லைப் புற நகர் இல்லை. ரஷ்யாவுக்கு உள்ளே உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 

Source : MSN