Surya Vs Bala: சூர்யாவை சிகரெட் பிடிக்க சொல்லி கொடுமைப்படுத்திய பாலா..!

சூர்யாவை இயக்குநர் பாலா ரொம்ப கொடுமை படுத்தியதாக பேசிய வீடியோ டிரெண்டாகி வருகிறது. 

நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் வணங்கான் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார். 

பாலாவின் 25 ஆண்டு கால திரைப்பயணத்தின் வெற்றி விழா அண்மையில் நடந்தது. அதில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், பாலா பற்றிய சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்படி பேசிய அவர் சூர்யா, பாலாவின் திரைப்பயண உறவு குறித்தும் பேசினார். 

பால இயக்கத்தில் சூர்யா முதலில் நடித்த படம் நந்தா. அந்த படத்துக்கு பிறகு சூர்யாவுக்கு திரைப்பயணத்தில் தொடர் வளர்ச்சிகள் இருந்தன.  இந்த நிலையில் நந்தா படத்தில் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்தது குறித்து இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரிடம் பகிர்ந்துள்ளார். 

அது குறித்து பேசியபோது,  ”நந்தா படத்தில் நடிக்கும் போது சூர்யா என்கிட்ட வந்து புலம்பி இருக்கான். அங்கிள் பாலா என்ன குந்த வச்சி உட்கார சொல்றாரு. தரையில உட்கார சொல்றாரு. உதட்ட கருப்பா பண்ண சொல்றாரு. சிகரெட் பிடிக்க சொல்றாரு. இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு” என்று சூரியா புலம்பியதாக ஆர்.வி. உதயகுமார் கூறியுள்ளார்.

அந்த அளவுக்கு ஒரு கேரக்டரை பாலாவால் மட்டுமே செதுக்க முடியும் என்று கூறிய ஆர்.வி. உதயகுமார், சூர்யாவை ரொம்ப கொடுமைப்படுத்தி விட்டதாக கூறினார்.